விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் தற்போது சுவாரஸ்யமாக ஒளிபரப்பாகி வருகின்றது. இந்த சீரியலில் மீண்டும் ராதிகா பாக்யா வீட்டிற்கு வந்திருந்தாலும் அவர்கள் இருவரும் ஒற்றுமையாக காணப்படுகிறார்கள்.
இந்த நிலையில், பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்து என்ன நடக்கும் என்பதற்கான புதிய ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்று விரிவாக பார்ப்போம்.
அதன்படி குறித்த ப்ரோமோவில், பாக்கியா வீட்டுக்கு போஸ்ட்மேன் வருகின்றார். அவர் வழங்கிய போஸ்டில் பாக்கியா ஏற்கனவே கோபி மீது கொடுக்கப்பட்ட கம்ப்ளைன்டுக்காக கோர்ட்டில் இருந்து அழைப்பு வந்துள்ளது.
இதை கேட்டு எல்லாரும் அதிர்ச்சி அடைந்த நிலையில், நீ என்னும் கேசை வாபஸ் வாங்கவில்லையா? என்று ஈஸ்வரி கடும் கோபத்துடன் பாக்கியாவை திட்டுகிறார்.
ஆனாலும் கோபி, நான் செய்த தப்புக்கு நானே தண்டனையை ஏற்றுக் கொள்கின்றேன் என பெருந்தன்மையாக சொல்லுகின்றார். அடுத்த நாள் குறித்த கேஸுக்கான ஹியரிங் நடைபெறுகிறது. அதில் கோபி ஆஜர் ஆகிறார். இதுதான் தற்போது வெளியான ப்ரோமோ.
எனவே கோபிக்கு தண்டனை கிடைக்குமா? இல்லை பாக்கியா மனசு மறுவாரா? என பொறுத்து இருந்து பார்ப்போம்.
Listen News!