• Jan 11 2025

கூலி படத்தில் டெரரான லுக்கில் வெளியான சத்யராஜின் போஸ்டர்!

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்து வரும்  திரைப்படம் தான் கூலி. இந்த படம் மீதான எதிர்பார்ப்பு மிகவும் ரசிகர்கள் மத்தியில் அதிகமாகவே காணப்படுகின்றது. அதற்கு காரணம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி, விஜய், கமலஹாசன் நடித்த திரைப்படங்கள் மிகப்பெரிய அளவில் ஹிட் கொடுத்தன. இதன் காரணமாகவே ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படத்தின் மீதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

கடந்த ஆண்டில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பையும் வசூலையும் பெற்றுக் கொடுத்தது. இதைத்தொடர்ந்து இளம் இயக்குனர்களுடன் கூட்டணி அமைத்து வருகின்றார் ரஜினிகாந்த்.

இன்னொரு பக்கம் ரஜினிகாந்த் நடிப்பில் ரிலீசுக்கு தயாராகி உள்ள திரைப்படம் தான் வேட்டையன். இந்த திரைப்படம் எதிர்வரும் அக்டோபர் மாதம் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக  உள்ளது. இன்றைய தினம் படத்திற்கான டப்பிங் பணிகளையும் ரஜினிகாந்த் ஆரம்பித்து இருந்தார்.


இந்த நிலையில், தற்போது கூலி படத்தில் சத்யராஜ் குறித்த போஸ்டரை தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார் லோகேஷ் கனகராஜ். குறித்த படத்தில் சத்யராஜ் 'ராஜசேகர்' என்ற கேரக்டரில் நடிக்க உள்ளார். மேலும் மொட்டை தலையுடன் கையில் மின் வயருடன் மிகவும் டெரரான லுக்கில் சத்யராஜ் காணப்படுகின்றார்.

இதன் மூலம் கூலி படத்தில் சத்யராஜின் கேரக்டர் மிக அழுத்தமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அத்துடன் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement