• Dec 27 2024

பேசுபொருளாக மாறிய பருத்திவீரன் திரைப்படம்... இயக்குனரிடம் மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர்...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குனர் அமீர் குறித்து நான் பயன்படுத்திய வார்த்தைகள் அவர் மனதை புண்படுத்தி இருந்தால் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் என இயக்குனர் ஞானவேல்ராஜா தெரிவித்துள்ளார் இந்த விபரம் தொடர்பாக பார்ப்போம். 


கார்த்தி நடிப்பில் வெளியாகி இருந்த பருத்திவீரன் திரைப்படம் தொடர்பாக பிரச்சனை தற்போது இரண்டு வாரகாலமாக  நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. அது தொடர்பாக இயக்குனர் அமீர் அவர்கள் கூறியதும் அதற்கு பதில் தயாரிப்பாளர் கானவேல்ராஜா கூறியதும் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. 


இந்நிலையில் அமீர் குறித்து பேசியது சமூகவலை தளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் ஞானவேல் வேல் ராஜா தற்போது இவ்வாறு மன்னிப்பு கேட்டுள்ளார்  'பருத்தி வீரன்' பிரச்சனை கடந்த 17 ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிறது. நான் இது நாள் வரை அதை பற்றி பேசியது இல்லை. என்றைக்குமே "அமீர் அண்ணா" என்றுதான் நான் அவரை குறிப்பிடுவேன். ஆரம்பத்திலிருந்தே அவர் குடும்பத்தாருடன் நெருங்கிப்பழகியவன். அவரது சமீபத்திய பேட்டிகளில் என் மீது அவர் சுமத்திய பொய்யான குற்றச்சாட்டுகள் என்னை மிகவும் காயப்படுத்தியது.


அதற்கு பதில் அளிக்கும் போது நான் பயன்படுத்திய சில வார்த்தைகள் அவர் மனதை புண்படுத்தி இருந்தால் அதற்கு நான் மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். என்னை வாழவைக்கும் சினிமா துறையையும் அதில் பணிபுரியும் அனைவரையும் மிகவும் மதிப்பவன் நான் என தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தெரிவித்துள்ளார். 

Advertisement

Advertisement