• Feb 02 2025

பிக்பாஸ் ஜனனிக்கு ஜோடியான சீரியல் நடிகர்.. அதிரடியாக வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

Aathira / 5 hours ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்களில் பலரும் தங்களுடைய திறமைகளை வெளிக்காட்டி வருகின்றார்கள். இதனால் அவர்களுக்கு இலகுவாகவே வெள்ளித் திரையில் வாய்ப்புக்கள் தற்போது கிடைத்து வருகின்றன.

அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர் தான் ஜனனி. இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசனில் கலந்துகொண்டு ரசிகர்களின் பேராதரவை  பெற்றார். இலங்கையைச் சேர்ந்த இவர் தனது கொஞ்சும் தமிழ் பேச்சாளும் தனது அழகாலும் பலரையும் கவர்ந்து வருகின்றார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ஜனனிக்கு மிகப்பெரிய ஜாக்பாட் அடித்தது போல விஜயின் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. அதன்படி லியோ படத்தில் நடித்தார் ஜனனி. இவருடைய முதல் படமே விஜய் திரிஷாவுடன் என்பதால் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.


அதன் பின்பு ஆல்பம் சாங், போட்டோ ஷூட் என கடும் பிசியாக இருந்த ஜனனி இறுதியாக உசுரே என்ற படத்தில் நடித்திருந்தார். தற்போது அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி வருகின்றார்.


இந்த நிலையில், பாக்கியலட்சுமி, மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் நடித்து புகழ்பெற்ற ஆரியன் நடிப்பில் உருவாக உள்ள படத்தில் ஜனனி நாயகியாக நடிக்க உள்ளார். தற்போது இந்த தகவல் ஜனனி ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

இவர்கள் இருவரும் இணையும் படத்திற்கு நிழல் என பெயரிடப்பட்டுள்ளது. அதேபோல திரைப்படத்தில் ரமேஷ் கண்ணா, மதன்குமார், திவ்யா கிருஷ்ணன், ஹரி விஜய் என பலரும் நடிக்கின்றார்களாம். தற்போது இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலாகியுள்ளது.

Advertisement

Advertisement