• Feb 27 2025

தமிழ் சினிமாவில் ரெக்கார்ட் உடைத்த ‘லக்கி பாஸ்கர்’ - சந்தோசத்தில் படக்குழு!

subiththira / 3 hours ago

Advertisement

Listen News!

சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த படம் வெளியான முதல் நாளிலிருந்தே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. 


திரையில் வெளியாகி இரண்டாவது வாரத்திலேயே OTT தளத்தில் வெளியான ‘லக்கி பாஸ்கர்’, டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் வரலாற்றில் பெரும் சாதனை படைத்துள்ளது. இப்படம் அமேசான் பிரைம், நெட்ஃபிக்ஸ் போன்ற முக்கிய தளங்களில் ஒளிபரப்பாகி மிகப்பெரிய பார்வையாளர்களை ஈர்த்துள்ளது. இப்படம் 50 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டு இருந்தது. தற்போது வெளியான தகவலின் படி, திரையரங்கு மற்றும்  OTT தளத்தின் மூலம் 13 வாரங்களில் 110 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது என கூறப்பட்டுள்ளது.


‘லக்கி பாஸ்கர்’ படத்தின் வெற்றியை முன்னிட்டு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பாராட்டுகளை பகிர்ந்து வருகின்றனர். இது மட்டுமல்லாது, படக்குழு இதனை கொண்டாடும் விதமாக வெற்றி விழாவையும் திட்டமிட்டு வருகின்றது.

அத்துடன் ‘லக்கி பாஸ்கர்’ படம் மிகக்குறைந்த முதலீட்டில் உருவாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ள ஒரு திரைப்படமாக உருவாகியுள்ளது. திரையரங்கு மற்றும் OTT தளத்தில் இப்படம் ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது.

Advertisement

Advertisement