தற்போது அட்லீ இயக்கத்தில் உருவாகவிருக்கும் புதிய படம் திரையுலகில் மிகப்பெரிய விவாதமாக மாறியுள்ளது. சமீபத்தில் வெளியான தகவலின்படி, அட்லீ இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய திரைப்படம் 600 கோடி பட்ஜெட்டில் தயாராகவுள்ளது. இது தமிழ் சினிமா வரலாற்றில் மிகப்பெரிய முதலீடாக உள்ளது. இப்படத்தின் தயாரிப்பு மற்றும் நட்சத்திர பட்டியல் பற்றிய தகவல்கள் தற்போது இணையத்தில் பரவி வருகின்றன.
அட்லீ இதற்கு முன்பு மெர்சல் , பிகில் மற்றும் ஜவான் போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கியவர். அவரது படங்களுக்கு எப்போதும் பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகின்றது. அந்தவகையில், தற்போது உருவாகவிருக்கும் படத்திற்கு 600 கோடி பட்ஜெட் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இதை இரண்டு பெரிய நிறுவனங்கள் கூட்டாக இணைந்து தயாரிக்கவும் இருக்கின்றன. இதில் அட்லீக்கு சம்பளம் மட்டும் 100 கோடியும் , அல்லு அர்ஜுனுக்கு 250 கோடி சம்பளமும் பேசியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இப்படத்தில் முன்னணி நடிகர்கள் நடிக்க உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. அத்துடன் தெலுங்கு நடிகரான அல்லு அர்ஜுன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது. மேலும் தமிழ் சினிமா ரசிகர்களிடையே இப்படம் குறித்த எதிர்பார்ப்பு உச்சத்துக்கு சென்றுள்ளது.
Listen News!