• Dec 26 2024

பிரபல சீரியல் நடிகையின் கணவருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை! ரவீந்திரனுக்கு இப்படியொரு வருத்தமா?

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

பிரபல சீரியல் நடிகையான மகாலட்சுமியின் கணவர் ரவீந்திரன் தனக்கு ஏற்பட்ட திடீர் உடல் நலக் குறைவின் காரணமாக அவசர சிகிச்சை பிரிவில் ஒரு வார காலமாக காணப்பட்டுள்ளார்.

தமிழ் சினிமா பிரபலங்கள் மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடர்பாக ரிவியூ செய்து வரும் ரவீந்திரன், தனக்கு நுரையீரலில் ஏற்பட்ட தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

குறித்த வீடியோவில் மூக்கில் டியூப் போட்டு பார்ப்பதற்கு மிகவும் பரிதாபமான நிலையிலேயே ரவீந்திரன் காணப்படுகின்றார்.


இவ்வாறு உடல்நல பிரச்சனையால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரவீந்திரர், விரைவில் உடல்நலம் சரியாகி மீண்டு வர வேண்டும் என்று ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

இதேவேளை கடந்த சில மாதங்களுக்கு முன்பு, ரவீந்திரர் ஒருவரிடம் பண மோசடி செய்யப்பட்டதாக குற்றச்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தமையும், தற்போது ஜாமினில் வெளிய வந்த நிலையில் அவர் உடல் நலத்தில் பிரச்சனை ஏற்பட்டு மருத்துவமனையில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement