• Dec 28 2024

'கோழிப்பண்ணை செல்லதுரை' படத்தின் டிரெய்லர் எப்படி இருக்கு? இதோ வீடியோ

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை, நீர்பறவை போன்ற வெற்றிப் படங்களை இயக்கி ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர் தான் இயக்குனர் சீனு ராமசாமி. இவர் இயக்கத்தில் இறுதியாக வெளியான மாமனிதன் திரைப்படம் விமர்சகர்கள் இடையே நல்ல பெயரை பெற்று வசூலிலும் சாதனை படைத்திருந்தது.

இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் ரிலீஸ் ஆகியுள்ள திரைப்படம் தான் கோழிப்பண்ணை செல்லத்துரை. இந்த படத்தில் ஜோகி பாபு உடன் புதுமுக நடிகர்களான ஏகன், பிரிகிடா, ஐஸ்வர்யா தத்தா, தினேஷ் முத்தையா, சத்யா உட்பட பலர் நடிக்கின்றனர். அசோக்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்தப் படம் கிராமத்துப் பின்னணியில் உருவாகியுள்ளதோடு இந்த படத்தின் படப்பிடிப்பு ஆண்டிப்பட்டியில் நடைபெற்றுள்ளது.


ஆக்லாந்து சர்வதேச திரைப்பட விழாவில் தேர்வான முதல் தமிழ் படம் என்ற பெயரையும் கோழிப்பண்ணை செல்லத்துரை பெற்று சாதனை படைத்துள்ளது. இந்த படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில், கோழிப்பண்ணை செல்லத்துரை படத்தின் டிரைலரை பட குழுவினர் இன்றைய தினம் வெளியிட்டுள்ளார்கள். இதில் அண்ணன் தங்கை உறவை பேசும் விதத்தில் இந்தப் படத்தின் கதை உருவாகியுள்ளதாக காட்டப்பட்டுள்ளது. மேலும் இந்த திரைப்படம் எதிர்வரும் செப்டம்பர் 20ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement