• Dec 26 2024

முத்துவுக்கு தெரியவந்த ட்ராமா? கறிக்கடைக்காரர் கொடுத்த சப்ரைஸ்? ரோகிணிக்கு அடுத்தடுத்து தொடரும் பேரிடி!

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று தான் சிறகடிக்க ஆசை. அதில் இன்று வெளியான எபிசோடில் என்ன நடக்குது என பார்ப்போம்.

மீண்டும் வீட்டுக்கு வந்த விஜயா, வந்ததும் மீனாவை திட்டி வேலை வாங்குகிறார். விஜயாவும் முத்துவை குத்திக் காட்ட, அண்ணாமலை மாடியில் ரூம் கட்டவேண்டும் என்று சொல்ல, அப்போ மீனாவை வெளியில் அனுப்ப முடியாது என யோசிக்கிறார்.

பிறகு வீட்டுக்கு பார்வதி வர, உன் கூட தனியா பேசணும் என ஸ்ருதி ரூம்க்கு செல்ல அவர் கதவை சாத்துகிறார். ரோகிணி ரூம்க்கு செல்ல, அங்கு மனோஜ், ரோகிணியும் சண்டை போடுகிறார்கள், முத்து ரூம்க்கு செல்ல, அங்கு அவர் தூங்குகிறார். இறுதியாக மொட்டை மாடிக்கு செல்கிறார்.

அங்கு ரோகிணி அப்பா வந்ததும் இதுல பெரிய ரூம் காட்டுவன், லிப்ட் கட்டுவன், கார் வாங்குவேன் என கனவு கோட்டை கட்டுகிறார் விஜயா.

இதை தொடர்ந்து, ரோகிணி பிரண்ட் வீட்டுக்கு செல்ல, அங்கு கறிக்கடைக் காரர் வருகிறார். அங்கு வந்ததும் இருவரும் அவருக்கு பேசி, சமாளித்து அனுப்புகிறார்கள். இவருக்கு சான்ஸ் கொடுக்காட்டி இவர் பிரச்சனை பண்ணுவார் என யோசிக்கிறார்கள்.

மறுபக்கம், முத்துக்கு பெண்ணொருவர் கால் பண்ணி பாலருக்கு செல்கிறார். அங்கு அவர் ரோகிணியின் பாலருக்கு செல்ல, குறித்த பெண்ணும் முத்துவுக்கு காசு கொடுக்காமல் செல்கிறார்.

இதை தொடர்ந்து முத்து, இது ரோகிணியின் பாலர் ஆச்சே என செல்கிறார். இது தான் இன்றைய எபிசோட்.


Advertisement

Advertisement