• Apr 04 2025

நடிகர் ஹுசைனியின் இறுதி ஆசையை நிறைவேற்றிய மனைவி..!

Mathumitha / 1 week ago

Advertisement

Listen News!

துணை நடிகர் மற்றும் கராத்தை நிபுணராக பெரும் புகழ் பெற்றவர் ஷிகான் ஹுசைனி இவர் இன்று அதிகாலை உடல்நலக் குறைவால் மரணமடைந்துள்ளார். இச் செய்தி சினிமா உலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சமீபத்திய தகவலின்படி ஷிகான் ஹுசைனி கடந்த சில மாதங்களாக இரத்த புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அவரது உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. 


அவரின் மரணத் தகவல் சமூக வலைத்தளங்களில் விரைவில் பரவி ரசிகர்கள், குடும்பத்தினர் மற்றும் மாணவர்கள் அவருக்கு ஆழ்ந்த இரக்கத்தையும் அஞ்சலியையும் செலுத்தி வருகின்றனர். அவரது இறுதிச்சடங்கு நாளை காலை அவரது சொந்த கிராமமான ராணிப்பேட்டை அருகே நடைபெறும் என அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.


இந்த நிலையில் தற்போது அவரது மனைவி அவருக்கு சிலை ஒன்றை செய்துள்ளார்.மேலும் அவரது மனைவி குறித்த விடயம் ஒன்றினையும் சொல்லியுள்ளார்."ஹுசைனி சார் மருத்துவமனையில் சேரும்போதே அவருக்கு அவர் உருவில் சிலை செய்ய வேண்டும் என்று ஆசை இருந்தது. இந்த மாதிரி ஒரு சிலை, அப்புறம் 3D வடிவில் நிறைய மினியேச்சர் சிலை என்று நிறைய செய்ய சொல்லியிருக்கிறார். அதெல்லாம் இன்னும் வரவில்லை. இந்த சிலை செய்ய வேண்டும் என்பது தான் அவருடைய கடைசி ஆசை "

Advertisement

Advertisement