• Jan 03 2025

கில்லி ரேஞ்சுக்கு பில்டப் கொடுத்த சிறகடிக்க ஆசை சீரியல் நாயகன்! வைரல் வீடியோ

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலின்  நாயகனாக நடிப்பவர் தான் வெற்றி வசந்த். இவர் அந்த சீரியலில் முத்து என்ற கேரக்டரில் நடித்து வருகின்றார்.

இந்திய தொலைக்காட்சிகளில் டிஆர்பி ரேட்டிங் முன்னிலை வகிக்கும் சீரியலைக்கென்று தனியிடம் காணப்படுகின்றது. அதிலும் முதல் ஐந்து இடங்களை பிடிக்கும் சீரியல்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் இதுவரையில் சன் டிவி சீரியல்கள் முன்னிலை பெற்று வந்த நிலையில், சிறகடிக்க ஆசை சீரியல் முதல் ஐந்து இடங்களில் முன்னேறி வந்தது. சமீப காலமாகவே நான்காம் இடத்தில் இருந்து மூன்றாம் இடத்திற்கு சிறகடிக்க ஆசை முன்னேறி வந்த நிலையில், கடந்த வாரம் வெளியான டிஆர்பி ரேட்டிங்கில் திடீரென ஐந்தாவது இடத்திற்கு சரிவை சந்தித்துள்ளது.


இதன் காரணமாக இனிவரும் நாட்களில் விட்ட இடத்தை பிடிப்பதற்காக சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர்கள் தமது திறமையை வெளிப்படுத்துவார்களா? ரசிகர்களுக்கு ஏற்ற வகையில் கதைகளை எடுப்பார்களா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இந்த நிலையில், சிறகடிக்க ஆசை சீரியலின் நாயகன் வெற்றி வசந்த் கடலில் போர்ட்டில் செல்லும் வீடியோவை வெளியிட்டுள்ளார். தற்போது அவர் வெளியிட்ட வீடியோவை பார்த்த ரசிகர்கள் தமது மனமார்ந்த கருத்துக்களை தெரிவித்து வருகின்றார்கள்.

Advertisement

Advertisement