• Dec 27 2024

'வொன்டர் வுமன்' பட நடிகைக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது! குவியும் வாழ்த்துக்கள்

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

வொன்டர் வுமன் படத்தில் நடித்து புகழ்பெற்ற பிரபல நடிகை தான் கேல் கேடட். இவருக்கு தற்போது நான்காவது குழந்தை கிடைத்துள்ளது.

இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்துடன்  பதிவிட்ட கேல் கேடட், கர்ப்பம் என்பது எளிதானது அல்ல எனவும் தெரிவித்துள்ளார்.


இவ்வாறு தனக்கு பிறந்த பெண் குழந்தைக்கு 'ஓரி' என பெயரிட்டுள்ளார் கேல் கேடட்.  இதற்கு எபிரேய மொழியில் ஒளி என பொருள் உள்ளதாம்.


2008 ஆம் ஆண்டு ஜரோன் வர்சனோ என்பவரை திருமணம் செய்து கொண்ட கேல் கேடட், 2011, 2017, 2021 ஆகிய ஆண்டுகளில் அடுத்தடுத்து மூன்று பெண் குழந்தைகளை பெற்றெடுத்தார்.

இவ்வாறான நிலையில் தற்போது நான்காவது ஆகவும் பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார் கேல் கேடட். அவருக்கு பலரும் வாழ்த்துக்களை சொல்லி வருகிறார்கள்.

Advertisement

Advertisement