• Dec 28 2024

இந்த வாரம் 6 தமிழ்ப்படங்கள்.. ஓடிடி ரசிகர்களுக்கு கொண்டாட்டம்..!

Sivalingam / 9 months ago

Advertisement

Listen News!

ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளில் புதிய திரைப்படங்கள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் திரையரங்குகளில் வெளியான ஒரே மாதத்தில் ஓடிடி தளங்களில் வெளியாகி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இந்த வாரம் ஓடிடி ரசிகர்களுக்கு சிறப்பு விருந்தாக ஒரே வாரத்தில் ஆறு தமிழ் படங்கள் மற்றும் சில வெப் தொடர்கள் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வாரம் ஓடிடி தளங்களில் வெளியாகவுள்ள தமிழ் திரைப்படங்கள் மற்றும் எந்த ஓடிடி தளத்தில் வெளியாகிறது என்ற விவரங்களை தற்போது பார்ப்போம்.

1. விஜய் சேதுபதி, காத்ரீனா கைப் நடித்தமெர்ரி கிறிஸ்துமஸ்திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாக உள்ளது.

2. சந்தானம் நடித்தவடக்குப்பட்டி இராமசாமிஎன்ற திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாக உள்ளது

3. ‘எனக்கு எண்டே கிடையாதுஎன்ற திரைப்படம் ஆகா ஓடிடியில் வெளியாக உள்ளது

4. ‘நந்திவர்மன்என்ற படம் டென்டுகொட்டா ஓடிடியில் வெளியாகவுள்ளது.

5. யோகி பாபு நடித்ததூக்குத் துரைஎன்ற திரைப்படம் அமேசான் பிரைமில் வெளியாக உள்ளது

6. ’டெவில்என்ற திரைப்படம் டென்ட்கொட்டா ஓடிடியில்  வெளியாக உள்ளது

மேலும் ஹாட்ஸ்டார் ஓடிடியில்ஹார்ட் பீட்என்ற வெப் சீரிஸ் மற்றும்சுழியம்என்ற வெப் சீரியல் ஜியோ சினிமா ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

அதேபோல் சில மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களும் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகவுள்ளது.

ப்ரீத்என்ற தெலுங்கு படம் மற்றும்சவுண்ட் பார்ட்டிஎன்ற தெலுங்கு படம் ஆகா ஓடிடியில் வெளியாகவுள்ளது.

வளரிஎன்ற தெலுங்கு படம் ஈடிவி வின் ஓடிடியில் வெளியாகவுள்ளது.

யாத்ரா 2’ என்ற தெலுங்கு படம் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகவுள்ளது.

மேலும்ராணிஎன்ற மலையாளப் படம் மனோரமா மேக்ஸ் ஓடிடியில் வெளியாகவுள்ளது.

அன்வெஷிப்பின் கண்டேதும்என்ற மலையாள திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகவுள்ளது.

6 தமிழ் திரைப்படங்கள், 2 தமிழ் வெப்சீரிஸ் மற்றும் 4 தெலுங்கு படங்கள், இரண்டு மலையாள திரைப்படங்கள் இந்த வாரம் வெளியாவதால் ஓடிடி ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்.

Advertisement

Advertisement