• Dec 26 2024

அப்போ விஜய்க்கு ஏதோ விபத்து நடந்துருக்கு! விடாமுயற்சி மாறியே வீடியோ வெளியிடுவாரா வெங்கட் பிரபு?

Nithushan / 8 months ago

Advertisement

Listen News!

தமிழ் நாட்டில் தவிர்க்கமுடியாத பிரபலமாக இருப்பவர் நடிகர் விஜய் ஆவார். இவர் சமீபத்தில் நடிப்பதை விட்டுவிட்டு இன்னும் இரண்டு படங்களோடு சினிமாவை விட்டு விலகி அரசியலில் இறங்க போவதாக கூறியிருந்தார்.


இவ்வாறு இருக்கையில் இவர் சமீபத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் நடித்து வருகின்றார். இந்த படத்தின் படப்பிடிப்பின் போது விஜய்க்கு பைக் விபத்து ஒன்று நடந்ததாக தகவல்கள் பரவி வந்த நிலையில் இவர் மக்களவை தேர்தலுக்கு வாக்களிக்க வரும் பொழுது கையில் பிளாஸ்டர் ஒட்டியவாறு வந்தது சர்ச்சையை கிளப்பி இருந்தது.


இந்த நிலையிலேயே சமீபத்தில் ரீரிலீஸ் ஆகி ஹிட் கொடுத்த கில்லி திரைப்படத்தின் இந்த வெற்றிக்காக படக்குழுவினர் விஜய்க்கு நேரில் சென்று மாலை அணிவித்து பாராட்டி இருந்தனர். அங்கு எடுக்கபட்ட புகைப்படங்களில் விஜய் பிளாஸ்டரை அகற்றி இருந்ததால் அவரது காயங்கள் தெளிவாக தெரிகின்றது. இது இணையதளத்தில் வைரலாகி வருகின்றது. கையில் மட்டும் தான் காயமா? அல்லது தெரியாத காயங்கள் வேறு இருக்கிறதா? என்ற கேள்வியும் எழும்புகின்றது. மற்றும் சமீபத்தில் விடாமுயற்சி படப்பிடிப்பில் நடந்த விபத்தை விடியோவாக வெளியிட்டிருந்தனர் அவ்வாறே இதையும் வெங்கட் பிரபு வெளியிடுவார் என ரசிகர்களால் எதிர்பார்க்கபட்டு வருகின்றது. 

Advertisement

Advertisement