• Dec 26 2024

எனது இசைக்கு மயங்காத தமிழர்கள் உலகிலும் இல்லை! இலங்கை வந்த இளையராஜாவுக்கு அமோக வரவேற்பு! புகைப்பட தொகுப்பு இதோ..

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகின் இசைஞானியாக புகழப்பட்டு வருபவர் தான் இளையராஜா. இவருடைய பாடல்கள் என்றும் மங்காத தீபச் சுடர் போன்றது.

1000 படங்களுக்கு மேல் இசையமைத்திருக்கும் இசைஞானி இளையராஜா காலத்திற்கேற்ப இந்த ஆந்தாலஜிக்கும் இசையமைத்திருக்கிறார். 

தமிழில் மட்டுமில்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி எனப் பல மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். 


மேலும், இசைத்துறையில் உயரிய விருது என அழைக்கப்படும் 'பத்ம பூஷன்' விருதையும் இளையராஜா பெற்றிருக்கின்றார்.

இந்த நிலையில், தற்போது இலங்கைக்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார் இசைஞானி இளையராஜா.


இவ்வாறு இலங்கை வந்த இளையராஜா, தான் இசையமைத்த பாடலைக் கேட்காத தமிழர்கள் இலங்கையிலும் உலகிலும் இல்லை என்று கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து தெரிவித்துள்ளார்.

அத்துடன், இளையராஜாவுடன் 7 பாடகர்கள் மற்றும் 27 இசைக்கலைஞர்களும் இந்தியாவின் சென்னையில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் UL-128 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement