• Dec 25 2024

ரெட்காட் இன்னும் நிறைய இருக்கு குறும்படம் ஒன்று போடுங்க- மாயா குரூப்பை நடுங்க வைத்த கமல்ஹாசன்- Bigg Boss Promo 3

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் 6 சீசன்களை சிறப்பாக நிறைவு செய்துள்ள நிலையில் கடந்த மாதம் 1ம் தேதி முதல் 7வது சீசன் துவங்கியுள்ளது. இன்றைய தினம் இந்த நிகழ்ச்சி 41வது நாளில் என்ட்ரி கொடுத்துள்ளது.

 இதையடுத்து இந்த நிகழ்ச்சியின் வீக் எண்ட் எபிசோடின் அடுத்தடுத்த ப்ரபமோக்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளன. கடந்த வாரத்தில் ரெட் கார்ட் கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்ட பிரதீப் விவகாரம் பூதாகாரமாகியுள்ள நிலையில், அதுகுறித்து கமல் இந்த ப்ரோமோக்களில் வெளியாகி வருகின்றது.


அப்போது கமல்ஹாசன் விசித்ராவிடம் உங்களுக்கு என்ன பிரச்சினை என்று கேட்கின்றார். அப்போது விசித்ரா பிரதீப்புக்கு ரெட் காட் கொடுத்த மாதிரி போன வாரம் எங்களுக்கு நடந்தது என்று சொல்ல, கமல்ஹாசன் எங்களிடம் நிறைய ரெட்காட் இருக்கு அதுக்கு பஞ்சமே இருக்காது என்கின்றார்.

அத்தோடு என்னிடம் மன்னிப்புக் கேட்கமட்டாங்களா என்று கேட்க, கமல் இவங்க மன்னிப்பு எல்லாம் நம்புறீங்களா அந்த குறும்படத்தை போட்டுக் காட்டுங்க என்கின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைவதைக் காணலாம்.



Advertisement

Advertisement