• Dec 26 2024

"நம்ம அழுகுறதையும் புலம்புறதையும் கேட்பதற்கு இங்கு ஆள் இல்லை" - குணசித்திர நடிகர் வினோத் சாகர்.

Thisnugan / 4 months ago

Advertisement

Listen News!

குணச்சித்திர நடிகர் மற்றும் பின்னணி குரல் கலைஞரான வினோத் சாகர் தமிழ்,மலையாளம் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் பணியாற்றி வருகிறார்.சிறு கதாபத்திரங்களில் தோன்றும் இவரை போன்ற குணச்சித்திர நடிகர்களிற்கான அங்கீகாரம் இன்றளவும் வழங்கப்படவில்லை என்பது தான் உண்மை.

Vinod Sagar: Lack of releases since Ratsasan affected my career

தமிழ் ரசிகர்களுக்கு பிச்சைக்காரன் படத்தின் மூலம் ஓர் "ரைட்டு" பாத்திரத்தின் அறிமுகம் கிடைத்தாலும் "ராட்சசன்" திரைப்படத்தில் அவர் ஏற்று நடித்த உளநலம் பாதித்த ஓர் வாத்தியார் கதாபாத்திரம் திரையில் இவரை காண பயத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருந்தது.

Vinod Sagar and , listing of Vinod Sagar ,

2018 ஆம்  ஆண்டு வெளியான "ராட்சசன்" திரைப்படத்திற்கு பிறகு 25 படங்களில் நடித்துள்ளதாக கூறும் வினோத் சாகர் சினிமாவின் மறைமுகத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.மேலும் அவர் "படங்கள் ஹிட் ஆகாதனால உங்களுக்கு தெரிய மாட்டேங்குது. இந்த மாதிரி நிறைய படம் பண்ணிட்டு அது ரீச் ஆகல என்ற போது அந்த வருத்தம் கண்டிப்பா எனக்கு இருக்கும். நம்ம அழுகுறதையும் புலம்புறதையும் கேட்பதற்கு இங்கு ஆள் இல்லை. நீங்க ஜெயிச்சா உங்க கதையை கேட்பான் அவ்வளவுதான்." என நியத்தை பேசியுள்ளார்.

Advertisement

Advertisement