• Dec 25 2024

மலையாளத்தில் சக்கைப்போடு போட்ட 'பிரேமலு' பட நடிகர்.... 'அமரன்' படத்தில் இணைகிறாரா?

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

நடிகர் சிவகார்த்திகேயன் இதுவரையும் நடித்திராத புதிய கெட்டப்பில், அதாவது கம்பீரமான ராணுவ அதிகாரி கெட்டப்பில் நடித்த திரைப்படம் தான் அமரன்.

இந்த படம் முழுக்க முழுக்க தேசப்பற்று நிறைந்த படமாக உருவாகியுள்ளது. இதனை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ள நிலையில், அப் படத்தை  உலகநாயகன் கமல்ஹாசன் ராஜ்கமல் ஃபிலிம் சார்பில் தயாரித்துள்ளார்.

இந்த படத்தில் நடித்துள்ள சிவகார்த்திகேயன், ராணுவ உயர் அதிகாரியாகவும், சிங்கம் போல் கர்ஜிக்கும் தோரணையை உடையவராகவும் மிரட்டுகிறார்.

அமரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்துள்ளார். ஜிவி பிரகாஷ் இதற்கு இசை அமைக்கிறார்.


அண்மையில் வெளியான இந்த படத்தின் டீசர், காஷ்மீர் - இந்தியா இடையே நடக்கும் போர்க்காட்சிகள், ஒரு தலைவனாக தன்னுடைய குழுவில் உள்ளவர்களை எப்படி கையாளுகிறார், எப்படி ஊக்குவிக்கிறார் என்ற பல்வேறு விஷயங்களை அழகாக காட்டி இருந்தது.

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் திரைப்படத்தை எதிர்வரும் ஜூலை மாதம் வெளியிடுவதற்கு படக்  குழுவினர் திட்டமிட்டுள்ளார்களாம்.


இந்த நிலையில், 'பிரேமலு' பட புகழ் ஷியாம் மோகன் அமரன் படத்தில் இணைந்துள்ளதாக  தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், இவர் அமரன் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிப்பார் என்று கூறப்படுகிறது.



Advertisement

Advertisement