• Apr 25 2025

இது ஒரு மதவெறி தாக்குதல்..! பொங்கி எழுந்த நடிகை சனம்..

Mathumitha / 4 hours ago

Advertisement

Listen News!

பல சமூக சீர்கேடுகளுக்கு முகம் கொடுத்து வரும் நடிகை சனம் ஷெட்டி தற்போது இந்தியாவை உலுக்கிய கொடூர கொலை சம்பவம் குறித்து பேசியுள்ளார். குறித்த விடயம் குறித்து பேசிய வீடியோ பதிவு ஒன்றினை தனது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.


அந்த பதிவில் "நீங்க என்னை முத்திரை குத்தினாலும் எனக்கு கவலையில்லை! உண்மையைப் பேசுவதற்கு ஆகும் செலவு அது.நான் மீண்டும் சொல்கிறேன்!மதச்சார்பற்றவர்கள் என்பதற்காக மதத்தின் பெயரால் செய்யப்படும் படுகொலையை எதிர்க்க முடியாது என்று அர்த்தமல்ல!உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள், தாலிபான் உட்பட இஸ்லாத்திற்கு அவமானத்தை ஏற்படுத்தும் இந்த மனிதாபிமானமற்ற தாக்குதலை கடுமையாக எதிர்க்கின்றனர்." என கூறியுள்ளார்.


இவரது இந்த பதிவிற்கு ரசிகர்கள் பலரும் பலவிதமாக கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் அவர் பதிவு செய்த வீடியோ பதிவு இதோ..

Advertisement

Advertisement