• Dec 26 2024

இதுதான் என் ரத்த உறவுகள்.. ராதிகாவுக்கு செருப்படி! கோபிக்கு ஹார்ட் அட்டாக்? பாக்கியா பதிலடி

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கும் என்பதற்கான எபிசோட் வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்று பார்ப்போம்.

அதில்,  ராதிகா கோபியின் பிரச்சனையை தீர்ப்பதற்காக போனில் பேசிக் கொண்டிருக்கிறார். அங்கு வந்த கோபி தான் இப்போ தான் ரிலாக்ஸா இருப்பதாகவும், தனது ரத்த உறவுகள் பற்றியும் பெருமையாக பேசுகிறார்.

அதாவது, தனக்கொன்று என்றால் தனது பிள்ளைகள்  இனியா, செழியன், எழில் எல்லோரும் தன்னை தாங்குவதாகவும் அம்மா அப்பாவும் தன்னை விட்டுக் கொடுக்கவில்லை என்றும், இப்படி ஒரு குடும்பம் கிடைத்ததற்கு நான் கொடுத்து வச்சிருக்கணும் எனவும்  ரொம்பவும் பெருமையாக பேசுகிறார்.

இதை கேட்ட ராதிகா, நான் அப்ப நான் யாரு? உங்க பிரச்சனையை தீர்க்க நான் ரெண்டு நாளா மண்டைய பிச்சுக் கொண்டு திரிகிறேன் என்ன பத்தி ஒரு வார்த்தை சொல்லல என்று சண்டை போடுகிறார்.


இன்னொரு பக்கம் ரெஸ்டாரண்டுக்கு யாரெல்லாம் அழைக்கலாம் என பெயர் எழுதி வைக்கிறார்கள். அதில் முதலாவதாக ஜெனியின் பெயரை எழுதிவிட்டு ஜெனி இப்போ இல்லையே என கவலைப்படுகிறார்கள்.

இதை அடுத்து ஈஸ்வரியும் செழியனும் ஹாலில் இருக்கும் போது ஈஸ்வரி டிவியை ஒன் பண்ணுகிறார். அதில் ஒளிபரப்பான பாட்டை பார்த்து செழியன் அழுகிறார். இதை பார்த்து பாக்கியா அவருக்கு ஆறுதல் சொல்லுகிறார்.

அதன் பின் நைட் கிச்சன் கதவு, லைட் எல்லாவற்றையும் ஆப் பண்ணி விட்டு பாக்கியா செல்ல, அங்கு வந்த கோபி லைட்டை ஆன் பண்ணிவிட்டு பாக்கியாவை வம்பு இழுக்கிறார்.

நீ கேண்டின் துறந்த, காலேஜ் போன, இங்கிலீஷ் கிளாஸ் போன, எல்லாமே பாதியில நின்னுடுச்சு. அதுபோல இந்த ரெஸ்டாரண்டும் பாதில நிக்கும் அப்படி என்று சொல்ல, பாக்கியா என்ன சார் பண்றது குடும்பத்தையும் வேலையும் பார்க்கும்போது கஷ்டமா தான் இருக்கும். ஆனால் சில பேர் நல்ல வசதியா இருந்தாலும் ஒன்னையும் ஒழுங்காக செய்வதில்லை. இழுத்து மூடிட்டு வந்துருவாங்க. இப்படியே பேசிட்டு இருந்தா வி பி ஏறி  ஹார்ட் அட்டாக் வரும் என கோபிக்கு பதிலடி கொடுக்கிறார்


இதைத் தொடர்ந்து ஜெனிக்கு இன்விடேஷன் கொடுப்பதற்காக பாக்கியாவும் இனியாவும் ஜெனியின் வீட்டுக்கு செல்கிறார்கள். அங்கு ஜெனிக்கு முதலாவது இன்விடேஷனை கொடுக்க ஜெனியின் அப்பா பாக்யாவை கண்டபடி திட்டுகிறார். இருந்தாலும் பாக்கியா பொறுமையாக ஜெனியுடன் கதைத்து விட்டு செல்கிறார். இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement