முன்னனி நகைச்சுவை நடிகர் ரோபோ ஷங்கர் மகள் இந்திரஜா இவர் விஜய் நடிப்பில் வெளியாகிய பிகில் திரைப்படத்தில் பாண்டியம்மா எனும் கதாபாத்திரத்தில் நடித்து அனைவராலும் அறியப்பட்டார். கடந்த ஆண்டு தனது மாமாவை கோலாகலமாக திருமணம் செய்து கொண்டார்.
இந்த ஆண்டு தை மாதம் இவர்களுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை குறித்து தொடர்ந்து பல அப்டேட்களை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருவார். இந்த நிலையில் இவர் தற்போது தனது கலைமானி படிப்பினை முடித்து பட்டம் பெற்றுள்ளார்.
இதன் போது எடுத்து கொண்ட புகைப்படங்களை "ஆமாம், இது என் கனவு நாள்..வணிகவியல் இளங்கலை என் பட்டப்படிப்பு நாள்...அம்மாவின் கனவு நனவாகியது..என் கனவையும் விருப்பத்தையும் எப்போதும் நனவாக்கியதற்கு அம்மாவுக்கும் அப்பாவுக்கும் நன்றி..நீங்கள் இல்லாமல் நான் ஒன்றுமில்லை எப்போதும் என் பின்னால் நின்று ஆதரவளித்ததற்கு நன்றி அம்மா..." என கூறி பதிவிட்டுள்ளார். புகைப்படங்கள் இதோ ..
Listen News!