• Dec 27 2024

என்னுடைய உலகம் இது தான் , பிக்பாஸ் கிராண்ட் பினாலேவுக்கு என்ட்ரி கொடுக்காத யுகேந்திரன்- வெளியான அதிர்ச்சி வீடியோ

stella / 11 months ago

Advertisement

Listen News!


பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் இப்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக அர்ச்சனா தேர்வாகியுள்ளாராம்.இரண்டாம் இடத்தை மணியும் மூன்றாம் இடத்தை மாயாவும் பெற்றுக் கொண்டுள்ளனர்.இதன் கிராண்ட் பினாலே நிகழ்ச்சி இன்றைய தினம் ஒளிபரப்பப்படவுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராககளமிறங்கி, ரசிகர்களை கவர்ந்தவர் தான் பிரபல பாடகரும் நடிகருமான யுகேந்திரன்.சில வாரங்கள் நிகழ்ச்சியில் பங்கேற்று சக போட்டியாளர்களுக்கு டஃப் கொடுத்த இவருக்கு ஒரு நாளைக்கு 27 ஆயிரம் ரூபாய் சம்பளமாக கொடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. 


இந்நிலையில் இன்றைய தினம் அனைவரும் பிக்பாஸ் பரபரப்பில் இருக்க, யுகேந்திரன் தன்னுடைய மகனுடன் நீச்சல் குளத்தில் குளித்த வீடியோவைப் பகிர்ந்துள்ளார். இதன் வீடியோவை வெளியிட்டுள்ள யுகேந்திரன், தன்னுடைய வாழ்க்கை, உலகம் மற்றும் எல்லாமுமான தர்ஷனுடன் தான் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். 

இதையடுத்து பிக்பாஸ் 7 பைனல் போட்டிக்கு அவர் வரவில்லையா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். கடந்த சில தினங்களாக முன்னதாக எலிமினேட் ஆன போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுத்திருந்த நிலையில், அதிலும் யுகேந்திரன் மிஸ்ஸிங் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement