• Dec 26 2024

இது கடவுளுக்கே பொறுக்காது,இதனால தான் குழந்தையே கிடைக்கல- நயன்தாராவைத் திட்டித் தீர்த்த பயில்வான்

stella / 1 year ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நயன்தாரா. இவருடைய நடிப்பில் இறுதியாக வெளியாகிய அன்னபூரணி திரைப்படம் வசூல் ரீதியாக பின்னடைவைச் சந்தித்தாலும் நல்ல விமர்சனத்தைப் பெற்று வருகின்றது. இப்படத்தின் ப்ரமோஷனுக்காக நடிகை நயன்தாரா கலந்து கொண்டு பல விஷயங்களைக் கூறி இருந்தார்.

இது தவிர மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நயன்தாராக கொடுத்த நிவாரண பொருளை விளம்பரத்திற்காக பயன்படுத்தி இருந்தார். இதனால் ரசிகர்கள் பலரும் அவரைத் திட்டித் தீர்த்த நிலையில், பயில்வான் ரங்கநாதன் இது குறித்து யூடியூப் சேனல் ஒன்றில் பேசியுள்ளார். அதில் அவர் கூறியதாவது,


நயன்தாரா கேரளாவில் யூடியூப் சேனல் ஒன்றில் தொகுப்பாளராக இருந்தார். நயன்தாரா அண்மையில் இந்தி படத்தில் நடித்தார். அந்த படமும் சூப்பர் ஹிட்டடித்ததால், தற்போது பாலிவுட்டிலும் அவருக்கு படவாய்ப்பு வந்து கொண்டு இருக்கிறது. இப்படி நயன்தாராவிற்கு தெரிந்தது எல்லாம் காசு பணம்  துட்டு மணி மணி தான். அவரது திருமணத்தையே ஓடிடி தளத்திற்கு விற்கு காசு பார்த்தவர் தான் நயன்தாரா.

நயன்தாரா தற்போது, மிக்ஜாம் புயலில் , பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு உள்ளிட்டவற்றை கொடுத்தார். நல்ல விஷயம்தான், பாராட்டலாம். ஆனால் அதில் நயன்தாரா புகைப்படத்தோடு அவர் நடத்தும் பிசினஸ் பொருட்களின் விளம்பரமும் இருந்தது. அது மட்டும் இல்லாமல் அந்த பொருட்களை வாங்கியவர்களிடம் இந்த பொருள் எப்படி இருக்கு என்று சொல்ல சொல்லி இருக்கிறார்


இதெல்லாம் ஆண்டவனுக்கே அடுக்குமா, இப்படி செய்யலாமா, உனக்கே ஆண்டவன் குழந்தையை கொடுக்கல இரண்டு குழந்தைகளை தத்து எடுத்து வளர்ந்து வாற இது தேவையா. இந்த விளம்பர வீடியோவை பார்த்த அனைவருமே நயன்தாராவை திட்டி வருகின்றனர் என்று பயில்வான் தெரிவித்துள்ளார்.


Advertisement

Advertisement