• Dec 27 2024

என் மார்பங்களை கொச்சைப்படுத்துபவர்களுக்கு இது தான் பதில்… நீலிமாவின் போல்டான பேச்சு

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த தேவர் மகன் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தான் நீலிமா ராணி. 

இதையடுத்து ஜெயம் ராஜா இயக்கிய சந்தோஷ் சுப்ரமணியம், கார்த்தியுடன் நான் மகான் அல்ல, ராகவா லாரன்ஸின் ராஜாதி ராஜா, ஜோதிகா நடித்த மொழி உள்பட ஏராளமான திரைப்படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து இருந்தார் .

சினிமாவில் ஏராளமான படங்களில் நடித்திருந்தாலும், நீலிமாவுக்கு பெயரை பெற்றுத்தந்தது சின்னத்திரை சீரியல்கள் தான். 


சின்னத்திரையில் 50-க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்துள்ள நீலிமாவுக்கு ஏராளமான ரசிகர்களும் உள்ளனர். குறிப்பாக இவர் வில்லியாக நடித்த தொலைக்காட்சி தொடர்களுக்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்தன. 

மெட்டி ஒலி, கோலங்கள், அரண்மனை கிளி, வாணி ராணி போன்ற தொடர்களில் நீலிமாவின் நடிப்பு பெரியளவில் பேசப்பட்டன.


நடிப்பைத் தாண்டி தொகுப்பாளினியாகவும் தன் திறமையை காட்டியுள்ள நீலிமா, 2008-ம் ஆண்டு இசைவானன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். அண்மையில் இவருக்கு 2வது குழந்தை பிறந்தது அனைவருக்கும் தெரிந்தது தான்.

இந்த நிலையில் நீலிமா ராணி ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. 


அதில் பேசிய அவர் “ என்னுடைய மார்பகங்களை பற்றி நெகட்டிவாக கமெண்ட் செய்யும் போது, எனக்கு உடனே பதில் சொல்ல தோன்றும். நான் இன்னும் என் குழந்தைக்கு பால் கொடுத்துட்டு இருக்கேன் என்று சொல்ல தோன்றும்.

ஆனால் அவனுக்கெல்லாம் பதில் சொல்லி என்ன ஆகப் போகிறது என்று கமெண்டை டெலிட், அவரை பிளாக் செய்துவிட்டு நான் அடுத்த வேலையை பார்க்க தொடங்கிவிடுவேன்” என்று தெரிவித்தார்.


Advertisement

Advertisement