• Dec 27 2024

லியோ 2க்கு இது தான் டைட்டில்.. உறுதியாக அடித்துக் கூறிய லோகேஷ் கனகராஜ்!

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தற்போது பிரபல இயக்குனராக வலம் வருபவர் தான் லோகேஷ் கனகராஜ். இவர் தலைநகரம் என்ற படத்தின் மூலம் தனது முதலாவது அடையாளத்தை பதித்தார். இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து முன்னணி நட்சத்திரங்களை வைத்து பல ஹிட் படங்களை கொடுத்து வருகின்றார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான கைதி திரைப்படம் பிளாக் பாஸ்டர் ஹிட் அடித்தது. இந்த திரைப்படம் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒரு நாளிலேயே நடக்கும் சம்பவங்களை மிகவும் எதார்த்தமாக எடுத்துக் காட்டி இருப்பார். அதிலும் இந்த படத்தில் கார்த்தியின் கேரக்டர் யாருமே நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு காணப்பட்டது.

கைதி படத்தின் வெற்றியை தொடர்ந்து  கைதி படத்தின்  இரண்டாவது பாகத்தை லோகேஷ் விரைவில் தயாரிக்க உள்ளார். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியானது. அதன் பின்பு விக்ரம் படத்தில் உலக நாயகன் கமலஹாசனை வைத்து மிரட்டி இருப்பார் இந்தப் படமும் அபார வெற்றி பெற்றது.


இறுதியாக இளைய தளபதி விஜய் உடன் கூட்டணி வைத்து லியோ படத்தையும் இயக்கியிருந்தார். இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் கோடிகளை வாரிக் குவித்தது.. பாக்ஸ் ஆபிஸ் வசூலில் ஹிட் கொடுத்த படமாக லியோ படம் பதிவானது. இவ்வாறு வெற்றி படங்களை தொடர்ந்தும் கொடுத்து வருகின்றார் லோகேஷ்.

இந்த நிலையில், தற்போது லியோ படத்தின் இரண்டாவது பாகம் பற்றி சூப்பர் அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார் லோகேஷ் கனகராஜ்.

அதாவது லியோ படத்திற்கு முதலில் வைத்த டைட்டில் பார்த்திபன். அது ரொம்ப மென்மையாக இருந்ததால் தான் மாற்றினோம். ஒரு வேலை லியோ 2 எடுக்கும் வாய்ப்பு அமைந்தால் பார்த்திபன் தான் டைட்டிலாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement