• Apr 07 2025

பாரதிராஜாவின் மகன் மனோஜிற்கு நடந்தது இது தான்..! தொகுப்பாளர் ஆதவன் பேச்சு

Mathumitha / 1 day ago

Advertisement

Listen News!

பாரதிராஜாவின் மகன் மனோஜ் அண்மையில் மாரடைப்பின் காரணமாக உயிரிழந்தார். இவரது இழப்பு மொத்த சினிமா உலகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியது. இவரது மறைவின் பின்னர் பல வதந்திகள் எழுந்த வண்ணம் உள்ளன அதாவது இவர் மனஉளைச்சல் காரணமாக உயிரிழந்ததாக கூறி வருகின்றனர். இருப்பினும் இதனை யாரும் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர்.


இந்த நிலையில் தற்போது தொகுப்பாளர் ஆதவன் இவர் குறித்து நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளார். குறித்த நேர்காணலில் " என்ன பொறுத்தவரைக்கும் நான் அவர் அன்னைக்கு சொல்லும் போது தான் சொன்னேன் சார் அதெல்லாம் எங்க அண்ணன் தோக்கவும் இல்லை அவருக்கு ஸ்ட்ரெஸும் கிடையாது ஒண்டும் கிடையாது நீங்களா சொல்லிக்கிட்டிங்க அவர் தோத்து போயிட்டாருங்க அவர் வெற்றி அடைஞ்சிட்டாருங்க அவருக்கு இது வந்திச்சுன்னு சோஷியல் மீடியா வந்து இப்ப ரொம்ப சரி நான் இப்ப நான் உங்கள கேக்கிறேன் இவ்வளவோ தூரம் அவர் இறந்து போனதுக்கு அப்புறம் வந்து மனோஜ் என்ன செய்தார். மனோஜுக்கு ஸ்ட்ரெஸ் இருந்தா என கதைக்கிறாங்க இத முதலே தெரிஞ்ச மீடியா ஏன் அவர்கூட போய் பேசல நான் ரேடியோவில் வேலை செய்யும் போது விஜய் ,சூர்யா ,கார்த்தி போன்ற முன்னனி ஹீரோக்களின் ஸ்ட்ரெஸ் குறைக்கிறதுக்கு ஒரு மணி நேரம் உட்கார்ந்து பேசுவோம் ஆனால் இப்பெல்லாம் அப்படி இல்லை " என மிகவும் உக்கிரத்துடன் பேசியுள்ளார்.

Advertisement

Advertisement