• Dec 26 2024

"ஜாக்பாட்" திரைப்படம் வெளியாகி இன்றுடன் 5 ஆண்டுகள் நிறைவு !

Thisnugan / 4 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நாயகி மையப்படுத்திய  கதைகளை யாரும் எதிர்பாரா வகையில் வரவேற்றனர் தமிழ் ரசிகர்கள். நயன்தாரா,திரிஷா என தொடங்கிய இந்த வரிசையில் சிறந்த கதைகளுடன் களமிறங்கினர் நடிகை ஜோதிகா.அந்த வகையில் நாயகி மையக் கதையான "ஜாக்பாட்" திரைப்படத்தில் ரேவதியுடன் இணைத்து நடித்தார் நடிகை ஜோதிகா.

Jackpot (2019 film) - Wikipedia

கல்யாண் இயக்கத்தில் உருவான இப் படத்தை ஜோதிகாவின் கணவர் நடிகர் சூர்யா தனது தயாரிப்பு நிறுவனமான 2D என்டர்டெயின்மென்ட்டின் மூலம் தயாரித்து வெளியிட்டிருந்தார்."அட்ஷய பாத்திரம்" எனும் புராண கதையுடன் தொடர்புபடும் ஓர் கற்பனை கதையை மையப்படுத்திய "ஜாக்பாட்" திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதும் வசூல் ரீதியாக வெற்றிப் படமாக அறிவிக்கப்பட்டது.

படம்

கடந்த 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2 இல் வெளியான "ஜாக்பாட்" திரைப்படம் வெளியாகி இன்றுடன் 5 ஆண்டுகள் நிறைவடைந்திருப்பத்தை கொண்டாடும் விதமாக தயாரிப்பு நிறுவனம் சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது குறித்த போஸ்டருடன் 'சாகசம், நாடகம் மற்றும் பொழுதுபோக்கின் ஜாக்பாட் ! என்றென்றும் நம் இதயங்களுக்கு நெருக்கமான ஒரு கதை' என்ற பதிவையும் இட்டுள்ளது தயாரிப்பு நிறுவனம்.


Advertisement

Advertisement