தமிழ் திரையுலகில் இயக்குநர் சந்திரசேகர் ஒரு முக்கியமான பங்கு வகித்து வருகிறார். சமீபத்திய நேர்காணலில், அவர் பழைய திரைப்படங்களைப் பார்த்தால் இன்றைய தலைமுறையினர் "இவர்கள் இப்படி வாழ்ந்திருக்கிறார்களா?" என்று கேட்பார்கள் என்று குறிப்பிட்டார். ஆனால், இன்றைய திரைப்படங்களில் அந்த உணர்வு காணாமல் போய்விட்டது என்றும் அவர் வருத்தம் தெரிவித்தார்.
மேலும் சந்திரசேகர், "நாங்கள் பொறந்தோம் இருந்தோம் போய்டோம் என்று இருக்கக் கூடாது என்றதுடன் எப்படி வாழ்ந்தோம் என்பது பலருக்கும் முன்மாதிரியாக இருக்க வேண்டும்" என குறிப்பிட்டார். ஆனால், இன்றைய சூழலில் யாரும் அந்த உணர்வுடன் வாழ்வதில்லை என்பது அவருக்கு பெரும் வருத்தமாக இருந்தது.
சந்திரசேகர் நடிப்பில் தற்போது வெளிவரவிருக்கும் 'கூரன்' திரைப்படம், ஒரு நாய்க்கு சுதந்திரம் அளிக்கிற விதமாக இருக்கும் என அவர் தெரிவித்தார். அத்துடன், அந்த திரைப்படத்தைப் பார்த்தால் எல்லாரும் கண்கலங்கிச் செல்லும் அளவிற்கு உணர்வுபூர்வமாக இருக்கும் எனவும் கூறினார்.
சந்திரசேகர் கூறுகையில், "கூரன்' படத்தில் ஒரு நாய் எப்படி வாழ்கின்றது என்பதையே கூறுவதாக அமைந்துள்ளது என்றார். மேலும் அந்த படத்தைப் பார்த்தால், கண்டிப்பாக எல்லோரும் அழுவார்கள்" என உறுதியுடன் கூறினார்.
Listen News!