• Jan 08 2025

தமிழ் திரையுலகினருக்கு பேரதிர்ச்சி.. இரண்டு நாட்களாக உயிரிழந்து கிடந்த காமெடி நடிகர்

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

2013 ஆம் ஆண்டு வெளியான சொன்னா புரியாது திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் தான் பிரதீப் கே விஜயன். இவர் சற்று உடல் பருமனோடு இருப்பதால் பல காமெடி படங்களில் குணச்சித்திர கேரக்டரில் நடித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து இவர் நடித்த தெகிடி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. அதற்குப் பின்பு தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், என்னோடு விளையாடு, மீசைய முறுக்கு, ஒருநாள் கூத்து, நெஞ்சில் துணிவிருந்தால், சங்கு சக்கரம், இரும்புத்திரை, ஆடை, கென்னடி கிளப் , ஹீரோ மேயாத மான்,  உள்ளிட பல படங்களில் நடித்தார்.

இறுதியாக நடிகர் ராகவா லாரன்ஸ் நடித்த ருத்ரன் படத்தில் நடித்திருந்தார். நடிப்பை தாண்டி பல சப் டைட்டில் போட்டு கொடுக்கும் பணியும் செய்து வந்தார்.

இந்த நிலையில், நடிகர் பிரதீப் கே விஜயன் பூட்டிய அறைக்குள் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் கோலிவுட் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


அதாவது கடந்த இரண்டு நாட்களாக இவரது போனுக்கு நண்பர்கள் அழைப்பு ஏற்படுத்த முயற்சி செய்தபோது அவர் பதிலளிக்கவில்லை. அதற்கு பின்பு இவரை தேடி வந்தவர்கள் கதவு உள்பக்கம் பூட்டப்பட்டு இருந்ததாலும்,  துர்நாற்றம் வீசுவது போல் இருந்ததாலும் காவல்துறைக்கு புகார் அளித்துள்ளனர். அங்கு வந்த பொலிஸார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அவர் இறந்து கிடந்துள்ளார்.

இதன் காரணமாக அவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகின்றது. தற்போது போலீசார் இவரது மரணம் பற்றி தீவிர விசாரணையில் ஈடுபடுபட்டு வருகின்றார்கள்.

Advertisement

Advertisement