• Jan 06 2025

இளையராஜா என்னை விட கமலுக்கே நல்ல படங்களை கொடுத்தார்! ஓபனாக சொன்ன ரஜனி காந்த்!

Nithushan / 6 months ago

Advertisement

Listen News!

சமீபத்தில் அமெரிக்காவில் உள்ள தமிழ்நாடு அறக்கட்டளையின் பொன்விளாவானது வெகு விமர்சையாக நடைபெறுகின்றது. இதற்கு பல முன்னணி சினிமா பிரபலங்களும் கலந்துகொண்டனர். அதிலும் சூப்பர்ஸ்டார் ரஜனி காந்த் காணொளிவாயிலாக கலந்துகொண்டு இளையராஜாவை பற்றி சில வார்த்தைகள் கூறியுள்ளார்.


அவர் கூறுகையில் "இளையராஜா கமலுக்குத்தான் அதிகமான ஹிட் பாடல்களைக் கொடுத்திருக்கிறார். முதலில் எனக்கும் கொடுத்துக் கொண்டுதான் இருந்தார். 70-களில் 'பொதுவாக என் மனசு தங்கம்' 'ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்' உள்ளிட்ட பல பாடல்களைக் கொடுத்தார். 


ஆனால், அதன் பின்னர் அவர் கொடி அப்படியே கமலின் பக்கம் சென்றுவிட்டது. கமலின் 'தேவர் மகன்', 'நாயகன்' உள்ளிட்ட படங்களுக்கெல்லாம், அவர் சூப்பரான பாடல்களைப் போட்டுக் கொடுத்திருக்கிறார். அதற்கு கமலும் ஒரு காரணம். கமல் அடுத்தடுத்த படைப்புகளை வித்தியாச, வித்தியாசமாக செய்திருந்தார்." என கூறியுள்ளார்.

Advertisement

Advertisement