தல அஜித்தின் தீவிர ரசிகன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி அஜித்குமார் நடிப்பில் வெளியாகவுள்ள Good Bad Ugly திரைப்படத்தின் அப்டேட் ஒன்றினை இப் படத்தின் இசையமைப்பாளர் ஜி .வி பிரகாஷ்குமார் ஒரு தகவலினை ரசிகர்களுக்கு வழங்கியுள்ளார். சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியாகிய விடாமுயற்சி திரைப்படம் அதிக வரவேற்பினை பெறாமையினால் வசூலில் பாரிய வீழ்ச்சியடைந்துள்ளது.
இதனால் இந்த படத்தினது வசூல் அளவும் குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் இசையமைப்பாளர் ஜி .வி பிரகாஷ்குமார் இப் படம் குறித்து "நானும் இந்த இயக்குநரும் இணைந்து வேலை செய்த அனைத்து படங்களும் ஹிட் 18 வருஷம் கழிச்சு அஜித் சார் ஓட சேர்கின்றேன். எவ்வளவு ஸ்பெஷல் ஆ மாசா இருக்கணும் music ;அஜித் சார் பயங்கர மாஸா பண்ணியிருக்கார் " என கூறியுள்ளார்.
மற்றும் இது fans காண feast ஆ இருக்கும் ஒரு fan boy இயக்கினால் அது ஒரு மாசான படம் தான் ஒரு celebration நிச்சயம் இருக்கும் என மிகவும் உறுதியாக கூறியுள்ளார். கிரீடம் படத்தின் பின்னர் இந்த கூட்டணி இணையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Listen News!