• Dec 26 2024

உலகமே கவனிக்கும் வகையில் இருந்த த்ரிஷா, சமந்தா இன்ஸ்டாகிராம் போஸ்ட்.. அப்படி என்ன செய்தார்கள்?

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

உலகமே கவனிக்கும் வகையில் நடிகைகள் த்ரிஷா மற்றும் சமந்தா தங்களது இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டு உள்ளதை அடுத்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் போர் நடைபெற்று வரும் நிலையில் இந்த போரை நிறுத்த பல உலக நாடுகள் முயற்சி செய்தும் தோல்வி தான் அடைந்துள்ளது. மேலும் இந்த போர் காரணமாக இரு நாட்டின் தரப்பிலும் ஏராளமான அப்பாவி மக்கள் பலியாகி வருவதை ஐநா உட்பட பல நாடுகள் கண்டித்து உள்ளன.

இந்த நிலையில் சமீபத்தில் நடந்த ஒரு தாக்குதலில் பாலஸ்தீனத்தில் உள்ள அப்பாவி பொதுமக்கள் தங்கி இருந்த முகாமில் தங்கியிருந்த 45 பேர் கொடூரமாக கொல்லப்பட்டனர். இதில் சிலர் குழந்தைகள் என்பது அதிர்ச்சிக்குரிய தகவல் ஆகும். இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் திரையுலக பிரபலங்கள் தங்களது கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.



‛All Eyes On RAFAH' என்ற ஹேஷ்டேக்கை பதிவு செய்து நடிகைகள் த்ரிஷா மற்றும் சமந்தா தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செய்த பதிவு உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. த்ரிஷா மற்றும் சமந்தா மட்டுமின்றி பல பாலிவுட் பிரபலங்கள், தென்னிந்திய பிரபலங்கள் இதே ஹேஷ்டேக்கை பயன்படுத்தி பதிவு செய்து வருகின்றனர். ஒரு சர்வதேச பிரச்சனைக்காக ஒட்டுமொத்த இந்திய திரை உலகினர் குரல் கொடுப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement