• Dec 27 2024

ஜோகி பாபு அடுத்த பட பெஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு வைத்த பிரபலம்.

Nithushan / 6 months ago

Advertisement

Listen News!

இன்றைய நிலையில் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகர்களில் முதன்மையானவர் நடிகர் ஜோகி பாபு.பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான லொள்ளு சபாவில்  உதவி இயக்குநராகப் பணிபுரிந்த பாபு 2009 இல்  தனது முதல் திரைப்படமான யோகியில் நடிகராக அறிமுகமானார்.பின்னர் அத்  திரைப்படத்தின் பெயரை அவரது மேடைப் பெயருக்கு முன்னொட்டாக மாற்றினார்.


பின்னர் சுந்தர்.சி யின் கலகலப்பு  படத்தில் குறிப்பிடத்தக்க ஒரு பாத்திரத்தில் தோன்றினார் .2013 ஆம் ஆண்டில், பட்டத்து யானை  உடன் தனது முதல் நீட்டிக்கப்பட்ட நகைச்சுவைப் பாத்திரத்தில் தோன்றினார்.தொடர்ந்து வாய்ப்புகள் அவரை தேடிவர தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர்களில் முன்னிடத்தை பிடித்தார்.


இதைத் தொடர்ந்து அவர் நடித்த கோலமாவு கோகிலா இல் நயன்தாராவுக்கு ஜோடியாக அவரது ஒருதலைப்பட்ச காதலன் சித்தரிப்பு விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டதுடன் அவரின் தனித்திறமை பலரையும் பிரம்மிக்க வைத்தது.2021 ஆம் ஆண்டு, அரசியல் நையாண்டி படமான மண்டேலாவில் , பஞ்சாயத்துத் தேர்தல்களின் முடிவுகளைத் தீர்மானிக்கும் ஒற்றை வாக்கின் பெயரிடப்பட்ட கதாபாத்திரத்தில் அவர் நடித்ததில் பெரும் வரவேற்பைப் பெற்றார். 


தொடர்ந்து  பேய் மாமா, பன்னி குட்டி ,பொம்மை நாயகி, யானை முகத்தான்,லக்கி மேன், தூக்குதுரை மற்றும் பூமர் அங்கிள் போன்ற படங்களில்  முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.அடுத்து ஜோகி பாபு முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படத்தின் பெஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது. 'ஜோரா கைய தட்டுங்க’ என தலைப்பிடப்பட்டிருக்கும் இப்படத்தின் பெஸ்ட் லுக் போஸ்டரை விஜய்சேதுபதி தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.


Advertisement

Advertisement