• Jan 27 2025

லொஸ்லியா ரயான் காதலா? முத்துக்குமரன் சொன்னது என்ன? நம்பிக்கையில் வெளியிட்ட வீடியோ

Aathira / 1 day ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார். இந்த சீசனை மக்கள் செல்வன் கையில் எடுத்து வெற்றிகரமாக முடித்து வைத்ததை தொடர்ந்து இதில் பங்கு பற்றிய போட்டியாளர்களின் படங்கள், அவர்களுக்கு கிடைத்த வாய்ப்புகள் என பல அப்டேட்டுகளும் வெளியாகி வருகின்றன.

அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பற்றிய ரயான் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங். இந்த படத்தில் பிக்பாஸ் பிரபலமான லொஸ்லியா, யூடியூபரான ஹரி பாஸ்கர் ஆகியோர் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார்கள்.

d_i_a

மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங் திரைப்படம் லொஸ்லியாவை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. அதில் அவர் ஹரி பாஸ்கரை காதலித்தாரா? இல்லை ராயனை காதலித்தாரா என்பது கேள்விக்குறியாகவே காணப்படுகின்றது. 


மேலும், லொஸ்லியா இதுக்கு முதல் நடித்த கூகுள் குட்டப்பா, பிரன்சிப் ஆகிய படங்களை விட இதில் அவருடைய நடிப்பு பெரிதும் பாராட்டப்படுகிறது.

இந்த படத்திற்கு பிக்பாஸ் சீசன் 8 பங்கு பற்றிய பிரபலங்கள் ரயான் சார்பில் சென்று பாசிட்டிவ் விமர்சனங்களை அளித்து இருந்தார்கள். இது தொடர்பான வீடியோக்களும் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி இருந்தன.

இன்னொரு பக்கம் பிக்பாஸ் சீசன் 8ன் டைட்டில் வின்னரான முத்துக்குமரன் திருச்செந்தூர் முருகனை தரிசித்த வீடியோ இணையத்தில் வைரலாகி இருந்தது. பொதுவாகவே முத்துக்குமரன் மேடைப்பேச்சிலும் சரி பிக்பாஸ் வீட்டிலும் சரி நல்ல கருத்துக்கள் பலதையும் எடுத்துச் சொல்லுவார்.


அதுபோலவே குறித்த வீடியோவிலும் கடவுள் மீது நம்பிக்கை வையுங்கள். அல்லது இயற்கையோ, பிரபஞ்சமோ, அல்லது அம்மா அப்பா யார் மீது என்றாலும் நம்பிக்கை வையுங்கள். தான் பிக்பாஸ் செல்ல முன்பு இந்த கோவிலில் வழிபட்டு விட்டு தான் சென்றேன். தற்போது கிடைத்த வெற்றியையும் இந்த கோவிலில் பகிர்ந்ததாக தெரிவித்திருந்தார். 

குறித்த வீடியோவில் முத்துக்குமரன் சொன்ன பாசிட்டிவ் கருத்துக்கள் பல இளைஞர்களையும் கவர்ந்துள்ளது. தற்போது திருச்செந்தூர் முருகனை தரிசித்த முத்துக்குமரனின் பக்தி மற்றும் அவருடைய கடவுள் நம்பிக்கை என்பன இணையதளத்தில் பகிரப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement