• Dec 26 2024

வாடிவாசல் படம் பற்றி வெளியான அப்டேட்.. வெற்றிமாறன் போட்ட பிளான் இதுதானா?

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

கடந்த 2020 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்க ஒப்பந்தமான திரைப்படம் தான் வாடிவாசல். இந்த படம் முழுக்க முழுக்க ஜல்லிக்கட்டு மற்றும் அதனை ஒட்டிய வாழ்வியலை மைய கதையாகக் கொண்டுதான் அமைக்கப்பட்டது. இந்த படத்தில் சூர்யா ஜல்லிக்கட்டு மாடுகளை அடக்கும் வீரராக நடிக்கின்றார்.

மாடுபிடி வீரனாக நடிக்க உள்ள சூர்யா இதற்காக தமிழ் நாட்டின் தலைசிறந்த மாடுபிடி வீரர்களிடமிருந்து பயிற்சிகளையும் பெற்றார். அதே நேரத்தில் சொந்தமாக ஒரு காளை மாடு வாங்கி  தனது வீட்டில் வளர்த்தும் வருகின்றாராம்.

2020 ஆம் ஆண்டில் இருந்து அந்த மாட்டை சூர்யா வளர்த்து  வருவதோடு காளை மாடு ஜல்லிக்கட்டு காளை மாடுகளை போல் உருவம் பெற வேண்டும் என்பதற்காக அதனை வளர்த்தவர்களிடம் ஆலோசனைகளையும் பெற்று வருகின்றார். அதன் கொம்புகள் மிகச் சரியாக இருக்க வேண்டும் என்பதிலும் மிகுந்த கவனம் செலுத்தி வருகின்றது படக்குழு.


சூர்யா வீட்டுக்கு செல்லும் வெற்றிமாறன் காளை மாடு எப்படி வளர்ந்து உள்ளது என்பதை கவனிப்பாராம். இந்த திரைப்படம் பாதியில் கைவிடப் படுமா என சர்ச்சை எழுந்தது. அதற்கு முக்கிய காரணம் அமீர் அந்த படத்தில் நடிக்கின்றார் என்பது தான்.

இந்த நிலையில் தற்போது வாடிவாசல்  படம் பற்றிய புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. . அதாவது 2024ஆம் ஆண்டின் இறுதியில் இருந்து வாடிவாசல் படப்பிடிப்பைத் தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளதாம். இந்த தகவல் தற்போது வைரல் ஆகியுள்ளது.

Advertisement

Advertisement