• Dec 25 2024

வெற்றி வசந்தின் லவ் ப்ரொபோஸை முதலில் மறுத்த வைஷு.. இதுதான் அவங்க Love Story

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்குள் விஜய் டிவி சீரியலுக்கு என்றே தனி மவுசு காணப்படுகின்றது. அதிலும் தற்போது குறுகிய காலத்திற்குள்ளேயே சிறகடிக்க ஆசை சீரியல் விஜய் டிவி டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தை தக்க வைத்துள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலுக்குள் சிறகடிக்க ஆசை, பாண்டியன் ஸ்டோர் 2, பாக்கியலட்சுமி, மகாநதி, பொன்னி, நீ நான் காதல் போன்ற பல சீரியல்கள் ரசிகர்களின் பேவரைட் சீரியர்களாக காணப்படுகின்றது. இந்த சீரியலில் நடிக்கும் பிரபலங்களும் மக்கள் மத்தியில் பரீட்சியமானவர்களாக மாறிவிட்டார்கள்.

அந்த வகையில் சமீபத்தில் சிறகடிக்க ஆசை சீரியலின்  நாயகனாக நடிக்கும் வெற்றி வசந்திற்க்கும் பொன்னி சீரியலில் நாயகியாக நடிக்கும் வைஷ்ணவிக்கும் திருமண நிச்சயதார்த்தம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அவர்களுடைய திருமண நிச்சயதார்த்தத்தில் பல சின்னத்திரை பிரபலங்களும் கலந்து கொண்டு தமது வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள்.

இந்த நிலையில், வெற்றி வசந்த் - வைஷ்ணவியின் திருமண நிச்சயதார்த்தத்தின் போது வைஷ்ணவிக்கு மேக்கப் பண்ணியவர் அவர்களின் காதல் கதை பற்றி பிரபல சேனல் ஒன்றுக்கு பேட்டி  கொடுத்துள்ளார். தற்பொழுது அவர் வழங்கிய பேட்டி வைரலாகி வருகின்றது.


அதன்படி அவர் கூறுகையில், வைஷ்ணவி திடீரென ஒரு நாள் கால் பண்ணி தனக்கு திருமண நிச்சயதார்த்தம் நடக்க உள்ளது அதற்கு அவைலபிளா இருக்கீங்களா என்று கேட்டார். நான் முதலில் வைஷ்ணவி  தன்னை கிண்டல் பண்ணுவதாகவே நினைத்தேன். அதன் பின்பு அவருடைய நண்பிகளும் அவருக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளது தெரிவித்தார்கள்.

வெற்றி வசந்த் தான் முதலில் வைஷ்ணவிக்கு லவ் ப்ரொபோஸ் பண்ணி உள்ளார். ஆனால் வைஷ்ணவி எதுவுமே சொல்லவில்லையாம். அதன் பின்பு மீண்டும் சில நாட்கள் கழித்து வெற்றி வசந்த் திருமணம் செய்து கொள்ளலாமா என்று கேட்டதற்கு அவரும் சம்மதம் தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து இரு வீட்டார்களும் பேசி மிக விரைவாக அவர்களுடைய திருமண நிச்சயதார்த்தத்தை நடத்தி முடித்துள்ளார்கள்.

வைஷ்ணவிக்கு ஒரு மேக்கப்பும் ஒத்திகை பார்க்கவில்லை. அவர்களின் திருமண நிச்சயதார்த்த நாளில் அந்த நேரத்தில் பார்த்து பார்த்து செய்யப்பட்டது தான் என்று வெற்றி வசந்த்  வைஷ்ணவியின் காதல் கதையை தெரிவித்துள்ளார் மேக்கப் ஆர்டிஸ்ட்.

Advertisement

Advertisement