• Dec 26 2024

ஜிம்மில் நடந்த விபரீதம்.. பழம்பெரும் நடிகையின் ஒரே மகள் மரணம்.. அதிர்ச்சியில் திரையுலகம்..!

Sivalingam / 4 months ago

Advertisement

Listen News!

பழம்பெரும் நடிகையின் மகள் ஜிம்மில் வொர்க் அவுட் செய்து கொண்டிருக்கும் போது திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் மரணம் அடைந்தது திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எம்ஜிஆர், சிவாஜி உட்பட பல பிரபலங்களின் படங்களில் நடித்தவர் நடிகை எம்என் ராஜன். இவர் ஏஎல் ராகவன் என்ற பாடகரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருந்தனர்.

இந்த நிலையில் எம்என் ராஜம் - ஏஎல் ராகவன் மகள் நளினா, சரவணன் என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பதும் இந்த தம்பதிக்கு ஒரு மகன் இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. எம்என் ராஜம் கணவர் சரவணன் பழம்பெரும் நடிகர் எம்கே ராதாவின் மகன் என்பதும் கார்த்திக் ராஜாவின் மைத்துனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



 இந்த நிலையில் நளினா நேற்று ஜிம்மில் வொர்க் அவுட் செய்து கொண்டிருந்தபோது திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் மயங்கி விழுந்தார். உடனடியாக அவர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

எம்என் ராஜம் மகள் நளினாவின் மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும் அவருடைய மகன் தற்போது அமெரிக்காவில் இருக்கும் நிலையில் அவர் வந்த பிறகு இறுதிச்சடங்கு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement