• Dec 26 2024

விசித்ரா மறைச்சிட்டா,நான் மறைக்க மாட்டேன்- ஷகீலாவை அட்ஜெஸ்மென்டிற்கு அழைத்த பிரபல நடிகர்- ஹீரோவின் பெயரை சொல்லிட்டாரே

stella / 1 year ago

Advertisement

Listen News!

மலையாளம் ,தமிழ் என இருமொழிகளிலும் கவர்ச்சி வேடங்களில் நடித்து பிரபல்யமானவர் தான் ஷகீலா.இவருக்கு தமிழ்நாடு முழுவதும் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். எதையும் தைரியமாகவும் வெளிப்படையாகவும் பேசக்கூடியவர்.

படங்களில் வாய்ப்புகள் குறைந்ததும் சின்ன சின்ன வேடங்களில் நடிக்க தொடங்கினார் ஷகீலா. சிவா மனசுல சக்தி, அழகிய தமிழ் மகன், பாஸ் என்கிற பாஸ்கரன் போன்ற படங்களில் சின்ன ரோல்களில் வந்து நடித்திருப்பார். இதனை அடுத்து விஜய் டிவியில் ஒளிபரப்பான குக்வித்கோமாளி நிகழ்ச்சியில் பங்கு கொண்டதன் மூலம் பிரபல்யமானார்.


இந்த நிகழ்ச்சியின் மூலம் அனைவரும் ஷகீலாவை அம்மா என்றே அழைக்க ஆரம்பித்தனர். அந்த பிரபலத்திற்கு பிறகு பிரபல யூடியூப் சேனலில் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார்.அண்மையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபற்றி வரும் விசித்ரா தன்னை ஒரு நடிகர் அட்ஜெஸ்ட்மென்டிற்கு அழைத்தாக கூறி இருந்தார்.

இந்த நடிகை ஷகீலா இந்த விவகாரம் குறித்தும் தனக்கு நேர்ந்த மோசமான அனுபவம் குறித்தும் பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். அதில் நான் தெலுங்கு இண்டஸ்ட்ரியில் இப்போதும் பணியாற்றிக்கொண்டுதான் இருக்கிறேன். ஒருமுறை தெலுங்கு பட இயக்குநர் சத்யநாராயணா ராவ் என்பவர் என்னை அட்ஜெஸ்ட்மெண்ட்டுக்கு கூப்பிட்டார். 


அடுத்த படத்தில் நடிக்க சான்ஸ் தருகிறேன் என்று சொல்லிதான் கூப்பிட்டார். அதற்கு நான், சார் இந்தப் படத்தில் நடித்ததற்கு சம்பளம் வாங்கிவிட்டேன். அடுத்த படம் எனக்கு விருப்பமும் இல்லை அவசியமும் இல்லை என்று சொல்லிவிட்டேன். அவர் வேறு யாருமில்லை தெலுங்கு நடிகர் அல்லரி நரேஷின் தந்தைதான். இப்போது அவர் உயிரோடு இல்லை இறந்துவிட்டார். நான் சொன்னது குறித்து ஒட்டுமொத்த தெலுங்கு திரையுலகமே திரண்டு வந்து என்னிடம் கேட்டாலும் ஆமா அவர் என்னை படுக்கைக்கு கூப்பிட்டார் என்று தைரியமாக சொல்வேன்” என்றார்.




Advertisement

Advertisement