• Dec 27 2024

விஜய் டிவி செல்லப்பிள்ளை டிடிக்கு இத்தனை கோடி சொத்துக்களா? ஆனால் அதைவிட இதுதான் பெரிசு..!

dd
Sivalingam / 8 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியின் செல்லப்பிள்ளை யார் என்று கேள்வி கேட்டால் உடனே அனைவரது பதிலும் டிடி என்பதாக இருக்கும் என்று தெரிந்த நிலையில் தற்போது அவரது சொத்து மதிப்பு குறித்த தகவல் பெறும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 1999 ஆம் ஆண்டு பள்ளியில் படிக்கும் போது விஜய் டிவியில் தொகுப்பாளினியாக அறிமுகமான டிடி, ‘உங்கள் தீர்ப்பு’ என்ற நிகழ்ச்சியை முதன் முதலில் தொகுத்து வழங்கினார். இதையடுத்து பாலசந்தர் இயக்கிய ’றெக்கை கட்டிய மனசு’ என்ற சீரியலில் நடித்த நிலையில் அதில் கிடைத்த பாப்புலாரிட்டி மூலம் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க ஆரம்பித்தார். மேலும் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வரும் டிடி, சில நிகழ்ச்சிகளை சொந்தமாக விஜய் டிவிக்காக தயாரித்திருந்தார்.



அவரது திருமண வாழ்க்கை மூன்றே ஆண்டுகளில் முடிவுக்கு வந்தாலும் அவர் தனது தொகுப்பாளினி தொழிலில் மட்டும் முடிவே இல்லாமல் தொடர்ந்து வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் அவரது சொத்து மதிப்பு குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

அவர் தொகுப்பாளினியாக ஒரு எபிசோடுக்கு மூன்று முதல் நான்கு லட்சம் வரை சம்பளம் வாங்கி வரும் நிலையில் தற்போது அவருக்கு 5 கோடிக்கு மேல் சொத்து இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் டிடி சில தொழில்களை செய்து வருவதாகவும் அதன் மூலம் லட்சக்கணக்கில் வருமானம் வருவதாகவும் கூறப்படுகிறது.

விஜய் டிவியில் அவர் சம்பாதித்தது கோடி கணக்கில் என்றாலும் அவர் சம்பாதித்த மனிதர்கள் தான் விலைமதிப்பில்லாதது என்பது குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட திரையுலகில் உள்ள அனைவரும் டிடிக்கு நெருக்கமானவர்கள் என்பதும் அதில் நயன்தாரா, த்ரிஷா உட்பட ஒரு சிலர் மிக நெருங்கிய தோழிகளாகவும் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement