விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் காமெடி நிகழ்ச்சிகள் கலந்து கொண்டு ஒரு காமெடியனாக தனது வாழ்க்கையை ஆரம்பித்தவர் தான் புகழ். தற்போது சின்னத்திரையில் மட்டும் இல்லாமல் வெள்ளித் திரையிலும் மிளிரும் நடிகராக காணப்படுகிறார்.
தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் காமெடியனாக நடித்து வந்த புகழ், தற்போது கதாநாயகனாக நான்கு, ஐந்து படங்களுக்கு மேலே நடித்து விட்டார். இதற்கு இடையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளிலும் பங்கு கொள்ளுவார்.
d_i_a
'கலக்க போவது யார்' நிகழ்ச்சியில் ஸ்டாண்ட் அப் காமெடியனாக களம் இறங்கிய புகழ் ஆரம்பத்தில் தன்னுடைய தனிப்பட்ட தேவைகளுக்காக கார் கிளீனிங் பண்ணுவது, திருமண மண்டபங்களில் எச்சில் இலை எடுக்கும் வேலை பார்ப்பது போன்ற பல கஷ்டங்களை அனுபவித்துள்ளார்.
இவ்வாறு படிப் படியாக முன்னேறிய புகழ் தற்போது ஒரு படத்திற்கு 50 முதல் 75 லட்சம் வரை சம்பளமாக வாங்குகின்றார். மேலும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்கு 10 முதல் 15 லட்சம் வாங்குவதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.
இந்த நிலையில், லண்டனுக்குச் விசிட் அடித்துள்ளார் விஜய் டிவி புகழ். இதன்போது அங்கு சூரியனை பார்த்ததாகவும், தான் உண்ணும் உணவையும் புகைப்படம் எடுத்து அதனை தனது இன்ஸ்ட்ரா ஸ்டோரியில் வைத்துள்ளார். தற்போது குறித்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
Listen News!