நடிகர் அஜித் தற்போது இரண்டு படங்களில் நடித்து வருகிறார். அவை இரண்டும் ரிலீசுக்காக காத்திருக்கும் நிலையில் குட் பேட் அக்லி இயக்குநருடன் தனி விமானத்தில் செல்லும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
நடிகர் அஜித் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் அடுத்ததாக குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தினை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். நடிகர் அஜித்தின் தீவிர ரசிகனான இவர் அஜித்தை வைத்து படம் இயக்குவது குறித்து தனது இன்ஸராகிராம் பக்கத்தில் பதிவிட்டு புகைப்படத்தினை ஷேர் செய்திருந்தார் அது வைரலாகி வரும் நிலையில். தற்போது இன்னுமொரு வீடியோ ட்ரெண்டாகி வருகிறது.
அந்த வீடியோவில் நடிகர் அஜித் மற்றும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் ஆகியோர் தனி விமானத்தில் செல்கிறார்கள். அவர்களுடன் உதவியாளர்களும் இருக்கிறார்கள் அப்போது எடுக்கப்பட்டது தான் இந்த வீடியோ. இந்நிலையில் அஜித் மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் இருவரும் பேசிக்கொண்டே வானத்தில் பறக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Latest Video of THALA #Ajithkumar Sir and Director Adhik in a Private Flight ✈️💥
Dubbing Session Completed Successfully 🎙️ #GoodBadUgly | #VidaaMuyarchi pic.twitter.com/U7432LlAvi
Listen News!