• Dec 26 2024

பிக் பாஸ் போட்டியாளர்களை முட்டாளாக்கும் விஜய் டிவி... அத்தனையும் மாயாவுக்கு ஆதரவாக தானா?

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி இன்னும் சில நாட்களில் நிறைவு பெறவுள்ளது. இதில் யார் டைட்டில் வின் பண்ணுவார் என்பதே பலரது எதிர்பார்ப்பாக உள்ளது.

இந்த நிலையில், பிக் பாஸ் போட்டியாளரான மாயாவுக்கு விஜய் டிவி அதிகமாக ஆதரவு கொடுப்பதாகவும், இதன் காரணமாகவே அவர் இதுவரையில் வந்துள்ளதாகவும், தகவலொன்று பேசப்படுகின்றது.



அதன்படி, பிக் பாஸ் வீட்டில் அதிக விதி மீறல்களை செய்யும் நபராக மாயா காணப்படுவதோடு இறுதியாக, எலிமினேஷனில் வெளியேறும் டோர் வழியில் இருக்கும் நபர்களுடன் மாயா பேச முயற்சி செய்தாலும் பிக் பாஸ் அதை கண்டு கொள்வது இல்லை. பல நேரங்களில் மைக்கை கழட்டி வைத்துவிட்டு பேசுகிறார், நாமினேஷன் பற்றி பேசுகிறார். ஆனால் இதுவரை இந்த விஷயங்கள் பிக் பாஸ் விதிமீறல்களுக்கு உள்ளே வரவில்லை.


அதேவேளை, பிக் பாஸ் வீட்டில் உள்ள ஏனைய போட்டியாளர்கள் செய்யும் சிறிய தவறுகளையும் நோண்டும் கமலஹாசன் மாயாவை கடிந்து பேசுவதே கிடையாது. 

அத்துடன், மாயா செய்யும் பிழைகளையும் ஒவ்வொரு எபிசோடிலும் நியாயப்படுத்தி காட்டிக் கொண்டிருக்கிறார். இதிலிருந்து விஜய் டிவி மற்றும் கமல் சப்போர்ட் உடன் மாயா நூறு நாட்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொடர்ந்து டைட்டில் வின் பண்ண வைப்பதே.. என்பது தெளிவாக தெரிகின்றது.

Advertisement

Advertisement