• Dec 26 2024

டிடி மீது ஒருதலை காதல்.. புரபோஸ் செய்ய சென்ற போது ஏற்பட்ட அதிர்ச்சி..!

dd
Sivalingam / 5 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவி பிரபலம் மீது தனக்கு காதல் ஏற்பட்டதாகவும் அந்த காதலை புரபோஸ் செய்ய சென்ற போது தனக்கு அதிர்ச்சி ஏற்பட்டதாகவும் விஜய் டிவி பிரபலம் ஒருவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

விஜய் டிவியில் ’காப்பி வித் டிடி’ என்ற நிகழ்ச்சி உட்பட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் திவ்யதர்ஷினி என்பதும் தொகுப்பாளினி என்ற ஒரு தனி அடையாளத்தை பெற்றுக் கொடுத்தது இவர்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட கோலிவுட் திரை உலகில் உள்ள அனைத்து பிரபலங்களையும் இன்டர்வியூ செய்துவிட்ட டிடி, அனைவரிடமும் நட்புடன் இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த 2014ஆம் ஆண்டு தனது நெருங்கிய நண்பர் ஸ்ரீகாந்த் என்பவரை டிடி திருமணம் செய்த நிலையில் திருமணம் ஆன சில ஆண்டுகளிலேயே இருவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பை அடுத்து 2017 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று டிடி பிரிந்துவிட்டார். இந்த நிலையில் திருமணம் மற்றும் விவாகரத்துக்கு பிறகு முழுமையாக தனது தொழிலில் மட்டுமே டிடி கவனம் செலுத்தி வருகிறார்.



இந்த நிலையில் விஜய் டிவியின் விஜே ரமேஷ் நல்லையன் என்பவர் டிடி உடன் பணிபுரிந்த நிலையில் அவர்தான் அவர் மீது கிரஷ் ஏற்பட்டதாகவும், அது காதலாக மாறியதாகவும் சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். தனது காதலை சொல்ல சென்ற போது தான் அவருக்கு நிச்சயதார்த்தம் முடிந்த விஷயம் தெரிய வந்ததாகவும் இதனால் அதிர்ச்சி அடைந்து காதலை சொல்லாமலே வந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இது நடந்தது டிடியின் திருமணத்திற்கு முன்பு என்றாலும் டிடியின் விவாகரத்துக்கு பிறகு அவரிடம் காதலை சொல்லும் தைரியம் தனக்கு இல்லை என்றும் சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement