விஜய் டிவியில் ஒளிபரப்பான மௌன ராகம் என்ற சீரியல் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தான் நடிகை செரின். இவர் இந்த சீரியலில் மிகவும் நெகட்டிவ் கேரக்டரில் நடித்திருப்பார். குழந்தையாக இருந்த போதும் இவருடைய பிடிவாதமும் சுட்டித் தனமும் ரசிகர்களால் ரசிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகாவின் மகளாக செரின் நடித்து வருகின்றார். இந்த சீரியலில் இவருடைய நடிப்பும் இவருடைய கேரக்டரும் ரசிகர்களால் மிகவும் பாராட்டப்பட்டது.
இந்த நிலையில், சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் தொடர்கிறது என்ற சீரியலில் புதிதாக களமிறங்க உள்ளார் செரின். தற்போது இந்த தகவல் வெளியாகி வைரலாகி உள்ளது. இதனால் ரசிகர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை செரினுக்கு தெரிவித்து வருகின்றார்கள்.
பாக்கியலட்சுமி சீரியலில் இவருடைய நடிப்பும் கேரக்டரும் பல ரசிகர்களையும் கவர்ந்தது. தற்போது சன் டிவியில் களமிறங்கும் செரினுக்கு நல்ல வரவேற்பு கிடைக்குமா இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Listen News!