• Dec 26 2024

மீனாவுடன் சேர்ந்து ஸ்ருதியை கலாய்த்துத் தள்ளிய விஜயா- இது என்ன அதுக்குள்ள மனசு மாறிட்டாரா?- வைரலாகும் வீடியோ

stella / 11 months ago

Advertisement

Listen News!


விஜய் தொலைக்காட்சியில் சில இளம் கலைஞர்கள் நடிக்க வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு தொடர் சிறகடிக்க ஆசை.அண்மையில் புதியதாக தொடங்கப்பட்ட இந்த தொடர் இப்போது தான் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.

சீரியலின் கதைப்படி விஜயா வீட்டிற்கு மூன்று மருமகள்களும் வந்து விட்டனர்.ரோகினியும் ஸ்ருதியும் வசதியான வீட்டில் இருந்து வந்தவர்கள் என்பதால் அவர்களை மகாராணி போலவும் மீனா கஷ்டப்பட்டக் குடும்பத்தில் இருந்த வந்ததால் வேலைக்காரி போலவும் நடத்தி வருகின்றார்.


இருந்தாலும் முத்து மீனாவுக்கு ஆதரவாக இருந்து வருகின்றார். மீனாவை வீட்டு வேலை செய்தே சாகடிக்கும் விஜயா எண்ணுவதைப் போல எப்போது தான் முத்துவும் மீனாவும் தனிக்குடித்தனம் போவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகக் காணப்படுகின்றது.

அப்படி தனிக்குடித்தனம் போனால் விஜயா மற்ற மருமகள்களால் எப்படியான கஷ்டங்களை அனுபவிப்பார் என்பதைப் பார்க்க ரசிகர்கள் ஆவலாக இருக்கின்றனர். என்ன தான் சீரியலில் சண்டை போட்டாலும் ஷுட்டிங் தவிர்ந்த ஏனைய நேரங்களில் இவர்கள் ஒற்றுமையாகவே இருந்து வருகின்றனர்.இதனை இவர்கள் செய்யும் ரீல்ஸ் வீடியோ மூலம் அறியலாம்.

எனவே தற்பொழுது விஜயாவும் மீனாவும் சேர்ந்து ஸ்ருதியைக் கலாய்பது போல ரீல்ஸ் செய்திருக்கின்றனர். இந்த வீடியோ வைரலாகி வருவதைக் காணலாம்.


Advertisement

Advertisement