• Dec 27 2024

அவமானத்தின் உச்சியில் கொந்தளித்த விஜயா.. ஏத்திவிட்டு பல்பு வாங்கிய ரோகிணி! அடம்பிடித்த முத்து

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று என்ன நடக்கும் என்பதற்கான எபிசோட் வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என பார்ப்போம்.

அதில், கிச்சனில் டீ குடித்தவாறே மீனா, ஸ்ருதி, ரோகிணி ஆகியோர் கதைத்துக்கொண்டிருக்க அந்த நேரத்தில் ரோகினி ஸ்ருதியிடம் பத்த வைக்கிறார். நான் நினைச்சேன் உங்க வீட்டுக்கு முத்து வந்து மன்னிப்பு கேட்பார் என, ஆனா நீங்க வந்துட்டீங்கன்னு சொல்ல, ஏன் நான் வந்தது பிடிக்கலையா?  ரெண்டு பேர் மேலையும் தப்பு இருக்கு என்று ரோகினிக்கு பதில் கொடுக்கிறார். மேலும் புருஷன் பொண்டாட்டி என்றா சண்டை வரும் தானே. ஏன் உங்களுக்கும் மனோஜ்க்கும் சண்டை வரலையா?  எனக் கேட்க,  ரோகிணி இல்லை என சொல்ல, அப்புறம் ஏன் மனோஜ் மொட்டை மாடியில் போய் தூங்கினார் என கேட்டு மீண்டும் பல்பு கொடுக்கிறார்.

மறுபக்கம் கல்யாண வாழ்க்கை பற்றி அண்ணன் தம்பி மூன்று பேரும் மொட்டை மாடியில் இருந்து பேசிக் கொண்டிருக்கின்றார்கள். அதன் பின்பு ஸ்ருதிக்கு ரவிக்கு போன் போட்டு தூங்க வருமாறு சொல்ல, ரவி விழுந்தடித்து கீழே வருகிறார். ரோகிணியும் போன் போட்டு மனோஜை கூப்பிடுகிறார். 

அதன்பிறகு முத்து மீனா போன் பண்ணலையே என மீனாவுக்கு போனை போட்டு நீ இப்ப என்னைய போன் பண்ணி கூப்பிடனும் என அடம் பிடிக்கிறார். அதன்படியே மீனாவும் போன் பண்ணி அவரை கூப்பிட்டு சந்தோசப்படுகிறார்.


இதை தொடர்ந்து வீட்டுக்கு வந்த ஸ்ருதியின் அம்மா, நான் சொல்லி தான் ஸ்ருதி வந்தா என நாடகம் ஆட, அந்த நேரத்தில் மீனாவின் வாடிக்கையாளர் ஒருவர் வந்து பூ கேட்கிறார். அதற்கு விஜயா மீனா இல்லை என சொல்லவும், மீனாவிடம் ஏற்கனவே சொல்லிவிட்டேன் உள்ள தான் பூ மாலை இருக்கும். எடுத்து தர சொல்ல, ஸ்ருதியின் அம்மாவும் எடுத்துக் கொடுக்குமாறு சொல்லுகிறார்.

வேறு வழியின்றி விஜயா பூவை எடுத்து அளந்து கொடுக்க, ஸ்ருதியின் அம்மா வேணுமென்றே நீங்களும் நல்லாவே பூ மாலை விக்கிறீங்க என கிண்டல் அடிக்கிறார். இதனால் கடுப்பில் விஜயா இருக்க இதையெல்லாம் பார்த்து ரோகிணி சந்தோசப்படுகிறார்.

இறுதியாக சுதா போகும்போது கையில் என பூ என ஸ்ருதி கேட்க, சம்மந்தி அம்மா தான் முலம் போட்டு கொடுத்தாங்க, மீனாவுக்கு உதவியா இருந்தாங்க என சொல்ல, உள்ளே போன ஸ்ருதி, பரவால ஆண்டி மீனாவுக்கு உதவியா இருக்கீங்க. கடைல யாரும் இல்லாட்டி நீங்க போய் பார்த்துக் கொள்ளுங்கள் என சொல்ல, விஜயா இன்னும் பயங்கர கோபத்தில் உலாத்திக் கொண்டிருக்கிறார். இதை பார்த்த ரோகினி இதுதான் சந்தர்ப்பம் என விஜயாவை ஏற்றி விடச் செல்கிறார். இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement