• Dec 27 2024

நிறைமாத வயிற்றில் அப்படி எழுதி.. சீரியல் நடிகையின் வைரல் போட்டோஸ்

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பிரபல சீரியல் நடிகையாக திகழ்பவர் தான்  நடிகை ஸ்ரீதேவி அசோக். இவர் பல்வேறு சீரியல்களில் நடித்து பிரபலமானார். சின்னத்திரை மட்டுமின்றி ஒரு சில படங்களில் வாய்ப்பு கிடைக்க அதிலும் நடித்து தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

புதுக்கோட்டையில் இருந்து சரவணன் என்ற திரைப்படத்தில் செல்வி கேரக்டரில் நடித்திருந்தார். அதற்குப் பிறகு கிழக்கு கடற்கரை சாலை என்ற படத்தில் நடித்திருந்தார்.

சின்னத்திரையில் செல்லமடி நீ எனக்கு, கஸ்தூரி, தங்கம், இளவரசி, பிரிவோம் சந்திப்போம், இரு மலர்கள், மானாட மயிலாட, என் பெயர் மங்கம்மா, சிவசங்கரி, வாணி ராணி, கல்யாண பரிசு, சித்திரம் பேசுதடி போன்ற தொடர்களிலும் நடித்து புகழ்பெற்றார்.


அத்துடன் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் நடித்து மிகவும் பிரபலமானார். தற்போது பூவே உனக்காக, காற்றுக்கு என்ன வேலி, அரண்மனைக்கிளி, தாலாட்டு உள்ளிட்ட சீரியல்களில் நடித்து வருகின்றார்.

இவர் அசோக் சிந்தலாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.அவர்களுக்கு ஒரு அழகிய மகளும் இருக்கும் நிலையில், தற்போது மீண்டும் இரண்டாவது முறையாக கர்ப்பமாகி உள்ளார். இவர்களுக்கு என்றே தனி ரசிகர் கூட்டம் உண்டு.

இந்த நிலையில் தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் ஸ்ரீதேவி தனது கர்ப்பகால நாட்களை எண்ணும் விதமாக கர்ப்பமான வயிற்றில் மாத நாட்காட்டியை வரைந்து அதில் ஒவ்வொரு நாளாக எண்ணுவது போன்ற புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். குறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.






Advertisement

Advertisement