• Dec 26 2024

விஜய்யுடன் நேருக்கு நேர் மோதும் விஷால்.. ஒரே நாளில் ரிலீஸாகும் படங்களால் பரபரப்பு..!

Sivalingam / 8 months ago

Advertisement

Listen News!

விஜய் ஏற்கனவே அரசியல் கட்சி ஆரம்பித்து 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ள நிலையில் விஷாலும் 2026 ஆம் ஆண்டு தனிக்கட்சி ஆரம்பிக்க போவதாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் விஜய் படம் வெளியாகும் தேதியில் விஷால் படமும் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்து சில மாதங்களாக சூப்பர் ஹிட் ஆன பழைய படங்கள் ரீ ரிலீஸ் ஆகி வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் விஜய், த்ரிஷா நடிப்பில் உருவான ’கில்லி’ திரைப்படம் வரும் 20ஆம் தேதி ரிலீஸாக இருப்பதாகவும் இந்த படம் கிட்டத்தட்ட 400 திரையரங்குகளுக்கு மேல் ரிலீசாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ’கில்லி’ ரிலீஸ் ஆகும் அதே தேதியில் விஷால் நடித்த சூப்பர் ஹிட் திரைப்படமான ’இரும்புத்திரை’ என்ற படமும் ரிலீஸ் ஆக உள்ளதாக சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விஷால், சமந்தா, அர்ஜுன் நடிப்பில் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் உருவான இந்த படம் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியானது என்பது இந்த படம் உலகம் முழுவதும் 70 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரே நாளில் விஜய்யின் ’கில்லி’ மற்றும் விஷாலின் ’இரும்புத்திரை’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் வெளியாக உள்ளதை அடுத்து திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Advertisement

Advertisement