• Dec 26 2024

மகளுக்கு நடத்த பிரச்சினை... திடீரென போலீசில் புகார் அளித்த மகேஷ்பாபுவின் மனைவி... நடந்தது என்ன...

subiththira / 10 months ago

Advertisement

Listen News!

பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவின் மனைவி நம்ரதா ஹைதராபாத் காவல் துறையில் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக பார்ப்போம் வாங்க. 


தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான மகேஷ் பாபுவுக்கு சித்தாரா என்ற மகள் உள்ளார். இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு மகேஷ்பாபு நடித்த ’சர்க்கார் வாரி பாட்டா’ என்ற திரைப்படத்தில் அறிமுகமானார்.


இந்த நிலையில் சித்தாரா சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நிலையில் அவரது பெயரில் போலி இன்ஸ்டாகிராம் கணக்கு ஆரம்பித்த மர்ம நபர்கள் சிலர் பண மோசடியில் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


சித்தாரா பெயரில் ஆரம்பிக்கப்பட்ட போலி கணக்குகளில் இருந்து ரசிகர்களுக்கு லிங்க் அனுப்பி அதன் மூலம் பணம் பெற்று வருவதாக கூறப்பட்ட நிலையில் இது குறித்து ஏற்கனவே நர்மதா தனது சமூக வலைத்தளத்தில் எச்சரிக்கை விடுத்திருந்தார்.


இந்த நிலையில் இது குறித்து காவல் துறையில் புகார் அளித்துள்ள நர்மதா சித்தாராவின் போலி இன்ஸ்டாகிராம் கணக்கு ஆரம்பித்தவர்கள் மீது காவல்துறையில் புகார் அளித்துள்ளதாகவும் அவரது பெயரில் போலி கணக்கை உருவாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.


பொதுமக்கள் விழிப்புடன் இருந்து போலி அக்கவுண்டில் இருந்து வரும் லிங்குகளை நம்ப வேண்டாம் என்றும் சம்பந்தப்பட்ட நபர் கைது செய்யப்படும் வரை பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.மேலும் தனது மகளின் உண்மையான இன்ஸ்டாகிராம் கணக்கையும் பதிவு செய்து அந்த கணக்கை மட்டும் பின் தொடரவும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement