• Dec 26 2024

சத்குருவுக்கு திடீரென என்னாச்சு? மூளையில் அவசர அறுவை சிகிச்சை! சற்றுமுன் பரபரப்பு தகவல்

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

ஈஷா அறக்கட்டளை நிறுவனரான சத்குரு அவர்கள், வித்தியாசமான ஒரு ஜோகியாகவும் ஞானியாகவும் ஆன்மீக குருவாகவும் திகழ்ந்து வருகிறார். இவரது ஆழமான எதார்த்தமான அணுகுமுறைக்கும், தத்துவத்துக்கும் பல பிரபலங்கள் பக்தர்களாக காணப்படுகிறார்கள்.

ஈஷா அறக்கட்டளை நிறுவனத்தின் நிறுவனர் ஜக்கி வாசுதேவ், பெரும்பாலும் சத்குரு எனவே அழைக்கப்படுகிறார். இந்த நிறுவனத்தின் மூலம் உலக அளவில் யோகா தொடர்பான நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். இவர் ஒரு ஆசிரியராக, ஊக்கமளிக்கும் பேச்சாளராக, ஆன்மீக குருவாகவும் காணப்படுகிறார்.

ஒவ்வொரு மகா சிவராத்திரி விழாவிலும் இவரது போதனைகளை, நடனங்களை கண்டுகளிப்பதற்காக பல்வேறு சினிமா  பிரபலங்களும் பக்தியுடனும் கலந்து கொள்வார்கள். இம்முறை கூட முக்கியமாக பூஜா ஹெக்டே, சந்தானம், தமன்னா ஆகியோர் பக்தியுடன் பங்கு பற்றி இருந்தார்கள்.


இந்த நிலையில், ஈஷா அறக்கட்டளை நிறுவனரான ஜக்கி வாசுதேவுக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது.

அதன்படி அப்போலோ மருத்துவமனை மருத்துவர் தரப்பில் கூறுகையில், கடந்த 17ஆம் தேதி ஜக்கி வாசுதேவுக்கு மூளையில் ஏற்பட்ட ரத்த கசிவு காரணமாக அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தற்போது அவர் குணமாகி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement